Wednesday, March 19

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைந்தார்

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) இன்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பாசமலர்,பார்த்தால் பசி தீரும் ,படித்தால் மட்டும் போதுமா ,அன்னை இல்லம், புதிய பறவை .தெய்வ மகன்,அன்புள்ள அப்பா மக்கள்திலகம் MGR அவர்கள் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன்,தாய் சொல்லை தட்டாதே , அன்பே வா,பரிசு,தொழிலாளி , மற்றும் சிவாஜி அவர்களும் ரஜினி அவர்களும் இணைந்த நடித்த நான் வாழ வைப்பேன்,விடுதலை ,மோகன் நடித்த விதி ,சிவகுமார் நடித்த பத்ரகாளி ,கமல் அவர்கள் நடித்த மங்கம்மா சபதம்,வடிவேலு நடித்த தெனாலிராமன் உள்ளிட்ட பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், மேலும் ஜெமினி கணேசன், விஜயகுமாரி நடித்த நடித்த பெண் என்றால் பெண் என்ற பட த்தை இயக்கியும் உள்ளார்,இந்த படம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது.

திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ், தமிழ் திரைப்படங்களின் உரையாடலில் தனி முத்திரை பதித்தவர். தனது ஊரான திருவாரூரின் பெயரையும், தன் பெயரான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் பல தலை முறை கலைஞர்களுடன் பணிபுரிந்தவர்.

Spread the love