Tuesday, September 1

செய்திகள்

சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோர்

சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோர்

செய்திகள்
நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோரை திறந்து வைத்தனர் சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோரை தமிழ் சினிமாவின் மிக அழகான மற்றும் சென்ஷேனலான நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் முக்தா ஆர்ட் ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளரான சஷி வங்கபள்ளி கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 15,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பட்டுப் புடவைகளும் அந்த சூழலும் ஒரு தெய்வீகத் தன்மையை கொண்டுள்ளதாக நடிகை பிரியங்கா மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் இருவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பார்வையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் செட்டிநாட்டின் ஸ்பரிசத்துடன் கூடிய அந்த சூழலின் அழகியல் உணர்வைக் கண்டு பரவசமடைந்தனர். நடிகை பிரியங்கா மோகன் தனது ஒளிரும் புன்...
குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

செய்திகள்
சென்னை வி ஆர் சென்னை மாலில் துளிர் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் சென்னை celebrities, ரோட்டரி டிஸ்ட்ரிக் 3232, , பாபுரோ solutions புராஜக்ட் இந்தியா டிரஸ்ட் அமைப்பு மற்றும் சென்னை, டி நகரிலுள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை VR மஹாலில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடகர் பிரசன்னா, வானொலி தொகுப்பாளர் தீனா, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்...600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஷசுன் கல்லூரி ஊடகவியல் துறை மாணவிகள், குழந்தை பாலியல் குற்றங்களை எவ்வாறு தடுப்பதென்று மைமின் மூலம் நடித்து நடனம் ஆடி காண்பித்தனர...
இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

சினிமா, செய்திகள்
நடிகர் சூர்யா துவங்கி வைத்த, இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோ, 'குட்லக் ஸ்டூடியோஸ்'  திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla, மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla,மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்...
கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

செய்திகள்
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி ...
சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

செய்திகள்
இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொ...
உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி -கார்த்தி சிவகுமார்

உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி -கார்த்தி சிவகுமார்

செய்திகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டி...
திரைப்பட தயாரிப்பாளர்கள் வருமானம் ஈட்ட மேலும் ஒரு வழி

திரைப்பட தயாரிப்பாளர்கள் வருமானம் ஈட்ட மேலும் ஒரு வழி

செய்திகள்
பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும் பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media) சனிக்கிழமை மாலை சென்னை ஜிஆர்டி கிராண்டில் நடத்திய ஊடக தொழில்நுட்ப மாநாட்டில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பம், வருவாய் மேம்பாடு மற்றும் புதுமையான தொழில்முனைவு ஆகியவை திரைப்படத் துறையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன‌ என்பதை ஆலோசிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக 'எதிர்கால மீடியா தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. வணிகத் திட்டமிடல் மற்றும் வருவாய் அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் பல சாதனைகள் படைத்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளில...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது

செய்திகள்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது VELS FILM INTERNATIONAL LIMITED திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புதிய முயற்சியின் முதல் கட்டமாக, ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குகிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு… “வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும், இது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராகவும் உள்ளது. இது திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம் மற்றும் திரைப்பட உரிமை விற்பனை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளிலும் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்த...
Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக பன்முகத் திறமை கொண்ட நடிகையான திருமதி ராதிகா சரத்குமாரை அறிவித்தது

Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக பன்முகத் திறமை கொண்ட நடிகையான திருமதி ராதிகா சரத்குமாரை அறிவித்தது

செய்திகள்
திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவிப்பதோடு பெண் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டங்களையும் அறிவிக்கிறது சென்னை 8 மார்ச் 2023: Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக பன்முகத் திறமை கொண்ட நடிகையான திருமதி ராதிகா சரத்குமாரை அறிவிப்பதிலும் அவருடன் இணைந்து செயல்படுவதிலும் பெருமிதம் கொள்கிறது. ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக, Propshell அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்க எப்போதும் முயற்சி செய்து வருகிறது. பல்துறை ஆளுமைக்கு பெயர் பெற்ற திருமதி ராதிகா சரத்குமாருடனான இந்த புதிய பயணம், நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை உயர்த்துவதுடன், புதிய உயரங்களை அடைய உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, propshell பெண் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்க உள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மிகவும் முக்கியமானது என்று நாங்...
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

செய்திகள்
பெண் சாதனையாளர்களை கௌரவிப்பது, சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும் கொண்டாடுவது போன்றவை அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதன் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த பெண்களை கெளரவிப்பதன் மூலம், அவர்களின் சாதனைகளை நாங்கள் கொண்டாடுவது மற்றும் அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வெற்றிகள் மற்றும் போராட்டங்களிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் Pro Chancellor டாக்டர். ஆர்த்தி கணேஷ் மற்றும் வேல்ஸ் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷனின் Vice President டாக்டர். ப்ரீத்தா கணேஷ் ஆகியோருடன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் இதுபோன்ற சக்தி வாய்ந்த பெண்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வேல்ஸ் வளாகத்தில் கீழேயுள்ள பெண்களுக்கு இந்த ஆண்டுக்கான "VELS Women Achiever Award" வழங்கப்பட்டது. ...