நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!
நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!
விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது. இந்தத் தொடரில் ரகசியம், சந்தேகம் மற்றும் பல வகையான உணர்வுகளும் காட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் தொடர் சைபர்கிரைம் மிஸ்ட்ரியுடன் குடும்பங்களின் ஆழமான உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறது. நாம் பாதுகாப்பு எனக் கருதும் இடமே நமக்கு ஆபத்தாக மாறும்போது நம்பிக்கை, ஏமாற்றுதல் மற்றும் வாழ்தல் எப்படி சிக்கலாகிறது என்பதைப் பற்றிய கதையாகவும் இது இருக்கும். இந்த நெட்ஃபிலிக்ஸ...