விகடன் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் தயாரிப்பில் லட்சுமி சரவணன் இயக்கத்தில், டோனி பிரிட்டோ இசையில், கதிர், திவ்யா, பூர்ணிமா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லிங்கம் வெப் சீரிஸ்-ன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:
விகடன் ராதா பேசும்போது,
தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு படைப்பு எப்போது முழுமையடையும் தெரியுமா? அந்த படைப்பு வெளியாகி வெற்றி பெறும் போது தான் என்றார்.
இசையமைப்பாளர் டோனி பேசும்போது,
இந்த சீரியஸுக்கு நான் வந்தது மேஜிக் தான். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பாடல்கள் கொடுத்திருக்கிறேன். இந்த சீரியஸ் எனக்கு சவாலாக தான் இருந்தது.
இதில் அனைவருக்கும் முதல் பாதியில் ஒரு கதாபாத்திரமும் இரண்டாம் பாதியில் ஒரு கதாபாத்திரமும் இருக்கும் என்றார்.
நடிகை பூர்ணிமா பேசும்போது,
இந்த சீரியஸ் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இதில் என்னுடைய கதாபாத்திரம் புரட்சியை உருவாக்கும் விதமாக இருக்கும். இயக்குனர் லட்சுமி சார் உடன் பல விஷயங்கள் பேசி இருக்கிறோம். மிகவும் பொறுமையான இயக்குனர். பிரதிப் சார் ஒர் சிறந்த வழிகாட்டி.
சில கலைஞர்களை பார்க்கும் போது இவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று தோன்றும். ஆனால் கதிரின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். ஒவ்வொரு பாவனையும் பிரித்து மேய்ந்து விட்டார்.
திவ்யா அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். எங்கள் இருவருக்கும் காட்சிகள் இல்லை. ஆனால், தோழிகள் ஆகி விட்டோம். உடைகள் முதல் பல விஷயங்கள் பேசுவோம்.
பாடலாசிரியர் என்னுடைய முகம் வரும் போது குறிப்பிட்ட வரிகளை எழுதியதற்கு நன்றி.
டோனி சாரை பார்த்த போது சாதாரணமாக இருந்த இவரா பிரமாதமாக இசையமைத்தார் என்று வியப்பாக இருந்தது என்றார்.
பிரதீப் எனக்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என்பது முதல் நெறைய கற்றுக் கொடுத்தார்.
நடிகை திவ்யா பேசும்போது,
ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் விகடனுக்கு நன்றி. ஐடி யில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு இது போல கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி.
நாகர் கோவிலில் வசிக்கும் பெண் காதலிக்க வேண்டும் என்றால், என்னென்ன விஷயங்களை மீற வேண்டும், எவற்றையெல்லாம் உடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கதாபாத்திரம். ரோகிணி அம்மா மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. நடிப்பென்று வரும் போது கதிர் இயல்பாக நடிப்பார்.
லிங்கம் பார்த்ததும் டோனி பிரிட்டோ சாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
வேவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.
லட்சுமி சார் இந்த லிங்கம் சீரியஸ் வெளியான பிறகு பெரிய படங்கள் இயக்குவார்.
ரவுடியின் வாழ்க்கை என்னவாகும். ஒரு குடும்பத்தில் ஒரு பையன் ரவுடியாக மாறினால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் என்னென்ன விஷயங்களை சந்திப்பார்கள் என்பதை உண்மை சம்பவம் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
பாடலாசிரியர் குறிஞ்சி பேசும்போது,
தெகடி படத்தில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். லட்சுமி அண்ணனிடம் இந்த சீரியஸுக்காக பாடல் எழுத கேட்டேன். இதுவரை எனக்கு அந்த யோசனை இல்லை. நீ எழுதி கொண்டு வா, பிறகு முடிவெடுக்கிறேன் என்றார்.
ஒரு பாடலை எழுதி கொண்டு வந்ததை பார்த்து விட்டு 4 பாடல்கள் கொடுத்தார்.
3 எபிசோட் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது என்றார்.
இயக்குனர் லட்சுமி சரவணகுமார் பேசும்போது,
2021-ல் இந்த சீரியஸை ஆரம்பித்தோம். நான் பயணத்தை விரும்ப கூடியவன். 25 புத்தகங்கள் எழுதியுள்ளேன். வசந்த பாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். ராம் சாரிடம் பணியாற்றவில்லை, இருப்பினும் நெறைய ஆலோசனைகளை கொடுத்தார். அவரை மிகவும் பிடிக்கும்.
5 வருடங்களாக பணியாற்றி இந்த சீரியஸின் கடைசி பணிகள் முடிக்கும் வரை சலிப்பு ஏற்படவில்லை.
85 சிறுகதைகளில் 30 விகடனுக்கு எழுதியிருக்கிறேன். அடுத்தடுத்த எபிசோடுகள் போகும் போது காவல்துறையினர் முதல் அனைவரும் ஆவலாக படித்து பாராட்டினார்கள்.
தினேஷ் பங்களிப்பு மிகவும் பெரியது. லிங்கம் சீரியஸ்-ல் அனைவரின் உழைப்பும் இருக்கிறது.
இசையமைப்பாளரை 2 வருடமாக ராகிங் செய்திருக்கிறேன்.
இசையமைப்பாளரிடம் ஒரு காட்சியை சொல்லிவிட்டு நான் சென்று சேர்வதற்குள் 45 நிமிடத்தில் பாடல் எழுதி இசைமைத்து வைத்திருந்தார்கள். புதிதாக வந்தவர்கள் ஆர்வமாக பணியாற்றுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
கலிங்கத்து பரணியில் இருந்து ஒரு பாடல் எடுத்தோம்.
மனைவியின் நகையை அடமானம் வைத்து இசை கச்சேரிக்கு போகும் அளவிற்கு இசை எனக்கு பிடிக்கும்.
ஆடை வடிவமைப்பாளர் பட்ஜெட்டிற்குள் செய்து கொடுத்தார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, போஸ் வெங்கட் அம்மா இறந்து விட்டார். அதை கேட்டதும் யாரிடமும் முகத்தில் காட்டாமல் சென்றார். ஒரு நாள் விட்டு மறுநாளே படப்பிடிப்பிற்கு வந்து விட்டார். தொழில் மீது அவர் வைத்திருக்கும் பக்தியைப் பார்த்து வியந்தேன்.
திருச்சியை எனக்கு பிடிக்காது. இந்த சீரியஸுக்கு பிறகு பிறந்த ஊர் போல் மாறிவிட்டது.
திவ்யா நடித்த படத்தை பார்த்து தான் தேர்வு செய்தேன். இதில் அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும்.
வெகுளியான ஒழுக்கத்துடன் இருக்க கூடிய நாயகன் வேண்டும் என்று தேடும் போது கதிர் சரியான தேர்வாக தோன்றியது. இயக்குனரின் கலைஞன் கதிர்.
என் வாழ்க்கையில் 35 வேலைகள் செய்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் வன்முறைகளை தான் அதிகமாக பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன்.
என்னுடைய நண்பன் இல்லையென்றால் நானும் கைதியாக சிறையில் இருந்திருப்பேன். என்னுடைய வாழ்க்கை இயல்பாக மாறும் வரை இது போன்ற படைப்புகள் தான் கொடுக்க முடியும்.
பத்திரிகையாளர்களுடன் எனக்கு நட்புறவு இருக்கிறது. இனியும் தொடரும் என்று நம்புகிறேன்.
என் அம்மா மற்றும் மனைவிக்கு நன்றிகள் என்றார்.
ஜியோ ஹாட் ஸ்டார் மூத்த துணை தலைவர் பிரதீப் மில்ராய் பேசும்போது,
முதல் முறை எழுத்தாளனுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் விகடனுக்கு முதலில் நன்றி.
ஒவ்வொரு முறை கதை கூறும் போதும் சலிப்படையாமல் முழுவதுமாக தான் கூறுவது தான் லட்சுமியின் சிறப்பு.
பிரஷாந்த் வந்த பிறகு இந்த படைப்பு இன்னும் சிறப்பாக இருந்தது.
கதிரை நாங்கள் ஒரு மாதிரி மனதில் வைத்துக் கொண்டு அணுகினோம். அப்போது வேறு ஒரு படைப்பிற்காக மிகவும் ஒல்லியாக இருந்தார். நான் உடம்பு தேறும் வரை காத்திருக்கலாமா? என்று கேட்டேன். வேண்டாம் என்று முக பாவனைகளிலேயே அனைத்தையும் சரி செய்து விட்டார்.
திவ்யா, பூர்ணிமா இருவரும் ஒப்பு கொள்வார்களா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், கேட்டதும் ஒப்பு கொண்டார்கள்.
சிறப்பு காட்சி பார்த்த பிறகு அனைவரும் பேசியது டோனி பிரிட்டோ பற்றி தான். சிறப்பாக இசையமைத்திருந்தார் என்றார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரஷாந்த் பேசும்போது,
நான் பேச வந்ததை லட்சுமி சார் பேசி விட்டார். என்னுடைய ஆட்டோ கிராப் சினேகா நிலா. எந்த விஷயமாக இருந்தாலும் அவரிடம் தயக்கமில்லாமல் பேசுவேன்.
இது முழுக்க முழுக்க லட்சுமி சரவணனுடைய படைப்பு தான். 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டே இருப்பார்.
கதிர் தான் டான். எங்களுக்கு உடல் மொழியில் சந்தேகம் வந்தால் கண்களாலேயே பெரிய டான் என்பதை காட்டி விடுவார்.
பூர்ணிமா, திவ்யா இருவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
லிங்கம் வெப் சீரியஸில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் கதிர் பேசும்போது
என்னிடம் கதை இருக்கிறது என்று அழைத்தால் கவனித்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் இருக்கும்.
சுழல், நடித்த பிறகு ஓடிடி ஹீரோ என்று பேச ஆரம்பித்தார்கள்.
லட்சுமி சார் 4 எபிசோட் கூறிவிட்டு, ஒரு ஒய்வு எடுத்து மீதி கதை கூறினார். என்னை இவ்வளவு நம்புறாங்களா? என்று தோன்றியது. என்னை போலவே என் மீது லட்சுமி சார் நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்க நீண்ட நாள் ஆகியது. என்னை மாற்ற தான் தாமதமாக பணியாற்றுகிறார்களா? என்று தோன்றியது.
என் மீது நம்பிக்கை வைத்த விகடன், ஹாட் ஸ்டார் பிரதீப் சார், பிரஷாந்த் சாருக்கு நன்றி.
ஒரு படத்திலும் அல்லது ஒரு தொடரிலோ நான் எடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு ஏற்ப உடல் முகம் ஆகியவற்றை அதன் பாணியில் வைத்திருப்பேன். அது முடிவடைவதற்குள் இன்னொன்று வந்தால் அதற்கேற்ப உடலையும் முகத்தையும் மாற்ற வேண்டி வரும். ஆகையால் நான் எப்போதும் ஒன்றை முடித்துவிட்டு இன்னொன்றுக்கு பணியாற்ற விரும்புகிறேன்.
லிங்கம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
நேற்று தான் டோனி சாரை சந்தித்தேன். பின்னணி இசை பற்றி கேட்டேன். 7 மற்றும் 8வது எபிசோட் பார்த்தீர்களா என்று கேட்டார், இல்லை என்றேன். நிச்சயம் பாருங்கள் என்றார்.
திவ்யாவுக்கும் எனக்கும் உணர்வு பூர்வமான காட்சி மிகவும் பிடிக்கும். பூர்ணிமா நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.
