தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம்
‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.
தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்தோம். மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகப் பதிவு செய்திருந்தனர். இதுவரை 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டோம். கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்தன. இந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம்.
தமிழ் சினிமா கம்பெனியின் முதல் படமாக அறிமுக இயக்குநர் டி.சரவணன் சொன்ன கதையை தயாரிக்கிறோம். அதற்கான அறிவிப்பு இன்று தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில் நடைபெற்றது.
திரைக்கதை, வசனம், லொக்கேசன், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை விரைவில் நடைபெ...









