Thursday, December 5

நடிகர் ஜெய் நடிப்பதோடு இசையமைப்பாளாராகவும் அறிமுகமாகும் வீரபாண்டியபுரம் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளிவருகிறது

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், கிராம பின்னணியில் உருவாகியுள்ள படம் “வீரபாண்டியபுரம்”. நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராமத்து லுக்கில் தோன்றியுள்ள நடிகர் ஜெய் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். இப்படத்தை Lendi Studios சார்பில் S .ஐஸ்வர்யா தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் ஜோடியாக நடிகை மீனாட்சி நடித்துள்ளார். மேலும் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.இசை – ஜெய் ஒளிப்பதிவு – R. வேல்ராஜ், பாடல்கள் – வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி. திண்டுக்கல்லை சுற்றி எடுக்கப்பட்ட வீரபாண்டியபுரம் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளி வருகிறது.

Spread the love