Monday, June 1

சினிமா

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர்

சினிமா, செய்திகள்
பயோகிராபி இந்தியா பதிப்பகத்தின் புத்தக வெளியீடு விழா நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, நடிகை சினேகா பிரசன்னா பெற்றுக்கொண்டார். இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பான 'Aesthetics Recaptured' நூலை நடிகை ரம்யாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை திருமகள் ராஜாராம் எழுதியுள்ளார். 'Aesthetics Recaptured' நூலை ஹேமாமாலினி குணாநிதி எழுதியுள்ளார். 20 தலைப்புகளுடன், 20 பகுதிகளாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் நூலின் திறனாய்வை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் விஜயலட்சுமி இ...
அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் பணியாற்றிய அதிரடியான அனுபவங்கள் – நடிகர் அருண் விஜய்

அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் பணியாற்றிய அதிரடியான அனுபவங்கள் – நடிகர் அருண் விஜய்

சினிமா
முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது. நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இய...
லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

சினிமா
ஒரு மருத்துவர்(பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது. நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம்(சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை. பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கபட்டுள்ளது, இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதபட்டுள்ளது. இந்த வித்தியாசமான கான்செப்ட்க்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பாடல்வரிகள் அமைக்கபட்டுள்ளது. பிராங்க்ஸ்டர் ராகுல் ஒரு நடிகனாக அவரது திறனை தாண்டி, இதை புரிந்து கொண்டு இந்த பாடலுக்கு ஏற்ற அசத்தலான நடனத்தை கொடுத்துள்ளார். சுரேன்.M பாடலின் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் அர்விந்த் கைலாசம் பாடலுக்கு ஒரு புது திரை வண்ணத்தை அளித்துள்ளார். இசையமைப்பாளர்...
வைகைப்புயலுடன், நடனப்புயல் கலக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வைகைப்புயலுடன், நடனப்புயல் கலக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சினிமா
பிரமாண்ட படப்பிடிப்பில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் ! தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்க...
Think Indie யாவின்  “ரெண்டு பாட்டில் வோட்கா” ஆல்பம் பாடல் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது !

Think Indie யாவின்  “ரெண்டு பாட்டில் வோட்கா” ஆல்பம் பாடல் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது !

சினிமா
Think Indie தமிழ் சுயாதீன  சுதந்திர இசைக் களத்தின் கவர்ச்சிகரமான மூலப்பொருளாக மாறிவிட்டது.  பல்வேறு வகைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் வீடியோ ஆல்பங்களை வழங்கும் அதன் திறன்,  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் இசைக்குழுவிலிருந்து  சமீபத்திய வெளியீடாக ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட   'ரெண்டு பாட்டில் வோட்கா' ஒரு அழகான ரொமாண்டிக் டிராக் ஆகும். குறுகிய காலத்தில், இந்த பாடல் இசை ஆர்வலர்களின் உற்சாகத்தை, குறிப்பாக இளைஞர்களை வசீகரிக்கும்  வரிகளுடன் கவர்ந்திழுத்துள்ளது. ஜோஷ் விவியனின் பேச்சுவழக்கிலான வரிகளும் அவரது இசையமைப்பும் அலாதியான அதிர்வுகளை பரப்பியுள்ளது. தவிர, ரோ வின்சென்ட் உடன் இணைந்த அவரது குரல், பாடலுக்கு மற்றுமொரு  அலங்காரமாக அமைந்துள்ளது. பாடலில் நகிதா டானியா பெர்னாண்டஸ் உடைய  நேர்த்தியான நவநாகரீக தோற்றம் தவறவிடக்கூடாதது. இந்த பாடல் குறுகிய காலத்தில...
ராம் பொத்தினேனி உடைய “ தி வாரியர்” படத்திற்காக ‘புல்லட்’ பாடலை  STR பாடியுள்ளார்.

ராம் பொத்தினேனி உடைய “ தி வாரியர்” படத்திற்காக ‘புல்லட்’ பாடலை  STR பாடியுள்ளார்.

சினிமா
இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் “தி வாரியர்” திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார்.   “புல்லட்” பாடலை தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், இந்த பாடல் ஒரு சக்திமிக்க பாடலாக, கேட்பவர் ரசிக்கும் விதமாக இருக்கும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளனர். ராம் பொத்தினேனி, லிங்குசாமி மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் உடைய நண்பரான நடிகர் சிம்பு தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது அவரது சிறப்பான பங்களிப்பை ‘தி வாரியர்’ படத்தின் புல்லட் பாடலுக்கு அளித்துள்ளார். இந்த மாஸ் பாடல் படத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கும், இப்படம் ஜூலை 14 உலகமெங்கிலும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது.   கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி , தி வாரியர் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவி...
 யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது

 யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது

சினிமா
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்றார். உங்களின் அன்பு, விமர்சனங்கள் அனைத்தையும் ...
விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம், 1 கோடி மரங்களை விரைவில் நட திட்டம்

விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம், 1 கோடி மரங்களை விரைவில் நட திட்டம்

சினிமா, செய்திகள்
நடிகர் விவேக் ஒரு சமூக ஆர்வலரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் மீது பேரன்பு கொண்டவரான விவேக், கிரீன் கலாம் திட்டம் எனும் பெயரில் 1 கோடி மரங்கள் நடும் முன்முயற்சியை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தார். நாடு முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் விவேக் அகால மரணம் அடைந்து அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, கிரீன் கலாம் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் முயற்சியை விவேக் உடன் 26 ஆண்டுகள் பயணித்த நடிகர் செல் முருகன் தொடங்கி உள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காவல் துறை உயர் அதிகாரியான அரவிந்தன் ஐபிஎஸ், பாபி சிம்கா, பூச்சி முருகன், நடிகர் உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவேக்கின் லட்சிய இலக்கான 1 கோடி மரங்களை நடும் பணி வ...
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

சினிமா
நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான 'மாயோன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது. தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும். 'மாயோன்' பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் 'மாயோன்' பட டீஸரை பிரத்யேக ஒலிக்க...
 பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் “நாகா”

 பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் “நாகா”

சினிமா
பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் "நாகா".இப்படத்தில் நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். 'அடிதடி', 'மகா நடிகன்', 'ஜன்னல் ஓரம்', ' குஸ்தி', 'பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் "நாகா". ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் 'கருட பஞ்சமி' படத்தை தயாரித்து வருகிறார். இரண்டாவது படைப்பாக "நாகா" படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். பிரபல நடிகையான இவர், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கினார். இப்பொழுது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். இதை முடித்து கொண்டு வந்த பின் இப் படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.இதே போல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல...