
ஜோஷ் விவியனின் பேச்சுவழக்கிலான வரிகளும் அவரது இசையமைப்பும் அலாதியான அதிர்வுகளை பரப்பியுள்ளது. தவிர, ரோ வின்சென்ட் உடன் இணைந்த அவரது குரல், பாடலுக்கு மற்றுமொரு அலங்காரமாக அமைந்துள்ளது. பாடலில் நகிதா டானியா பெர்னாண்டஸ் உடைய நேர்த்தியான நவநாகரீக தோற்றம் தவறவிடக்கூடாதது.
இந்த பாடல் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காதல், இசை மற்றும் ஓய்வு சுற்றுலா ஆகியவை எப்போதும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும். குறிப்பிடத்தக்க வகையில், கோவாவின் அழகை எடுத்து காட்டும் சிறந்த காட்சிகளை உள்ளடக்கிய இந்த பாடல், அந்த வகையில் நம் கவனத்தை ஈர்க்கிறது.

அருள் கூல் தனது இயக்குநரின் திறமையால் பாடலில் நம்மை பிரமிக்க வைக்கிறார்… தவிர, ஜான் ராமுடன் இணைந்து இப்பாடலின் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். கௌஷிக் KS (கலரிஸ்ட்), ஜோஷ் விவியன் (கான்செப்ட்), தினேஷ் (லைன் புரடியூசர்), அருண் (ஸ்டில்ஸ்), சிவா (போஸ்டர் வடிவமைப்பு), இம்ரான் ஹஷ்மி & அபர்ணா ஜா (நடனக் கலைஞர்கள்), குமார் பாண்டே (ஃப்ளேர் ஆர்ட்டிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.