Monday, June 1

சினிமா

’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட்

’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட்

சினிமா
படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’படத்துக்கு ரூ.7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பிரி புரடக்‌ஷன் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் 70 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை சித்தரிக்கும் வகையில் ரூ 7 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது.. 70 களீல் மிகவும் அறியப்பட்ட, ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த பிரபல திருடனான டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கைச் சித்திரமே இந்தப் படம் என்பத...
Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

சினிமா
சிலம்பரசன் TR நடிக்கும், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்க நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது, அவரது வாழ்க்கை மும்பைக்கு சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் ட...
தனது திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிந்த கலைஞர்களை கௌரவித்த ‘மாவீரன் பிள்ளை’ தயாரிப்பாளர் K.N.R.ராஜா..!

தனது திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிந்த கலைஞர்களை கௌரவித்த ‘மாவீரன் பிள்ளை’ தயாரிப்பாளர் K.N.R.ராஜா..!

சினிமா
வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்கும் 'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் K.N.R.ராஜா-விற்கும் தர்மபுரியை சேர்ந்த அனுஷா-விற்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்களைவிட ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், காதுகேளாதோர், ஊனமுற்றோர் மற்றும் பெரியவர்களும் அதிகளவில் இருந்தனர். அதே போல் நலிவடைந்த தெருக்ககூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர். இவர்கள் அனைவரையும் புதுமாப்பிள்ளை ராஜா வாகனம் வைத்து அழைத்து வந்து உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார். இந்த திருமணத்தில் நடிகர் ராதாரவி மற்றும் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கலந்துகொண்டார்கள். திருமணவிழாவில் உறவினர்கள், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம். ஆனால், ஆதரவற்றவர்களை அழைத்து திருமணத்தில் கலந்துகொள்ள செய்தது வியப்பாகவும், வரவேற...
ஆதார் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு.

ஆதார் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு.

சினிமா
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதார்' படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   படத்தின் தயாரிப்பாளர் திரும...
 புர்கா – கலையரசன் மற்றும் மிர்னா நடித்துள்ளனர், ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். மதிப்புமிக்க நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 புர்கா – கலையரசன் மற்றும் மிர்னா நடித்துள்ளனர், ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். மதிப்புமிக்க நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா
புர்கா - கலையரசன் மற்றும் மிர்னா நடித்துள்ளனர், ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். மதிப்புமிக்க நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தேர்வுகளில் ஒன்றாகும்,மேலும் படத்தின் முன்னணி ஜோடியான கலையரசன் மற்றும் மிர்னா சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2021 நவம்பரில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் 2021 முதல் திரைப்பட விழா சுற்றுகளில் கலந்துகொண்டது. இந்த மாத இறுதியில் NYIFF இன் 2022 பதிப்பில் புர்கா அதன் உலகஅரங்கேற்றத்தைக் கொண்டிருக்கும். படக்குழுவிவரம்: ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு, இசை ஆர் சிவாத்மிகா, எடிட்டிங் பி பிரவின் பாஸ்கர், ஆடை வடிவமைப்பு மீ...
‘ஓ மை டாக்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு

‘ஓ மை டாக்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு

சினிமா
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக...
‘தொடாதே ‘ இசை வெளியீட்டு விழா

‘தொடாதே ‘ இசை வெளியீட்டு விழா

சினிமா
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, இணைத் தயாரிப்பு எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார், பிஆர்ஓ கோவிந்தராஜ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், இய...
இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

சினிமா
'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி. "மாநாடு" படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்கள...
பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் ‘கே ஜி எஃப் 2’ ராக்கிங் ஸ்டார் யஷ்

பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் ‘கே ஜி எஃப் 2’ ராக்கிங் ஸ்டார் யஷ்

சினிமா
ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கே ஜி எஃப் 2' படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள். ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்...
தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் -அருண் விஜய் உற்சாகம்

தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் -அருண் விஜய் உற்சாகம்

சினிமா
''அமேசான் ஒரிஜினல் திரைப்படமான 'ஓ மை டாக்' எனும் படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்'' என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார். பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ஓ மை டாக்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த திரைப்படம் கோடை பருவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான நல்லதொரு புரிதலை அடிப்படையாகக்கொண்ட ஃபீல் குட் கதையாக தயாராகி இருக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் திரைப்படத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது. மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார...