Monday, June 1

சினிமா

ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் 14-ஆவது படத்தினை  இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் 14-ஆவது படத்தினை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

சினிமா
KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உள்பட சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன் எதிர்பார்ப்பை இப்பவே எகிற வைத்துள்ளது சூரரைப்போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப...
’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

சினிமா
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் கடந்த 17-ஆம் தேதி ’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி தொடங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சியில் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கும் பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் நித்தம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, “இது எனக்கு இதுவரையிலும் கிடைக்காத ஒரு பெரும் வாய்ப்பு. இங்கே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகைப்படமும் வலியினால், சோகத்தினால் உருவான கலைப்படைப்புகளாக தான் நான் பார்க்கி...
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில்,அசோக் செல்வன்,பிரியா பவானிசங்கர் நடிப்பில்,  உருவாகியுள்ள  “ஹாஸ்டல்”.திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு  ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில்,அசோக் செல்வன்,பிரியா பவானிசங்கர் நடிப்பில், உருவாகியுள்ள “ஹாஸ்டல்”.திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சினிமா
ஹாஸ்டல் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது... எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது...
நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

சினிமா
 நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்… சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக  திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது. ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய  ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது. இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தே...
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு

சினிமா
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான 'அன்டே சுந்தரனக்கி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நிறைய குடு...
“அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

“அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

சினிமா
அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு ! தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. “கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்." இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு படக்...
மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் ! 

மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் ! 

சினிமா
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது ! 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட இத்தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் 2022 ஏப்ரல் 22 முதல்  டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப...
நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்…

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்…

சினிமா, செய்திகள்
தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது, இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்....
Simon & Schuster India  பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில்   Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது.

Simon & Schuster India  பதிப்பக நிறுவனம் போரியா மஜும்தார் எழுத்தில்   Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தினை வெளியிடுகிறது.

சினிமா, செய்திகள்
திங்கள் 18 ஏப்ரல் 2022 புதுடெல்லி : இன்று Simon & Schuster India பதிப்பக நிறுவனம்  பிரபல எழுத்தாளர் போரியா மஜும்தார் எழுத்தில்,  Maverick Commissioner: The IPL – Lalit Modi Saga புத்தகத்தை, 20 மே அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது இப்புத்தகத்தை, “தலைவி, 83” படங்களின் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி திரைப்படமாக தயாரிக்கவுள்ளார். எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான போரியா மஜும்தார் கூறுகையில்.., ஐபிஎல்லின் வெற்றி கடந்த ஒன்றரை தசாப்தங்களில் இந்திய கிரிக்கெட் விளையாட்டில் நடந்த  மிகப்பெரிய அற்புதம். மேலும் இந்த மலர்ச்சி அத்தனை எளிதாக நடந்தது அல்ல. இந்த ஐபிஎல்லின்  உருவாக்கத்தின் போது கமிஷனர் லலித் மோடியிடம் இருந்ததெல்லாம் ஒரே  ஒரு யோசனை. அவர் கிரிக்கெட்டின் எதிர்காலம் நோக்கிய கனவை, ஒரு பார்வையை அனைவரிடமும் புரிய வைக்க முயன்றார் .  ஐபிஎல் எப்படி நடந்தது? அதன் பின் கதைகள் என்ன, ல...
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

இலக்கியம், சினிமா
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது....