Tuesday, March 18

 செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது‘கணம்’: ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிவிப்பு

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படிய வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘கணம்’. இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ‘அம்மா’ பாடலுக்கு சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக மெனக்கிடலை படக்குழு அளித்து வருகிறது. பணிகள் முடிந்து செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாகப் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவான திரைப்படம் என்பதால், தமிழில் வெளியாகும் அதே நாளில், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்கிற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘கணம்’ படம் குறித்த பல ஆச்சரியமூட்டும் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது

Spread the love