ஜி5 தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, நடிகர் அருண் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது
ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 19, 2022 முதல், இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்த "யானை" என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
அருண் விஜய்-ப்ரியா பவானி ஷங்கர் நடித்த “யானை” திரைப்படம், ஆகஸ்ட் 19, 2022 அன்று திரையிடப்படும் என்று ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள், பிளாக்பஸ்டர் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களை தந்த இயக்குனர் ஹரி எழுதி இயக்கியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 தளம் தற்போது இந்த ஆக்ஷன் நிறைந்த, உணர்ச்சிகரமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தை, ஒவ்வொரு இல்லங்களுக்கும் கொண்டு வருகிறது.
இப்படத்தில் பல அற்புதமான புதுமையான முயற்சிகள் நிகழ...









