Tuesday, March 18

எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

மஹத் ,தேவிகா சதீஷ் மானசா ,இவர்களுடன் ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக் மற்றும் பலர்  நடித்துள்ள எமோஜி தமிழ் வெப் சீரிஸுக்கு  ஒளிப்பதிவு  ஜலந்தர் வாசன் இசை: சனத் பரத்வாஜ் ,ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரிப்பில், ஆஹா ஒரிஜினல் ஓடிடி வெளியீட்டில், இந்த வெப் சீரிஸ் இன்றைய கால கட்ட  வாழ்வியலை யதார்த்தமாய்  வெளிப்படுத்தும்  வகையில் உள்ளது, இயக்கம் ஷென் எஸ்.ரெங்கசாமி.

ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் மஹத் ,மானசாவை  காதலிக்கிறார், சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குள்  பிரிவு ஏற்படுகின்றது இந்த பிரேக் அப், மகத்துக்கு மன அழுத்தத்தை தருகிறது , இதன் பின் தேவிகாவுடன் பழகும்போது  மன  அழுத்ததிலிருந்து  மீள்வதை உணர்ந்த  இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.அதற்க்கு பிறகு  இந்த வாழ்வும் விவாகரத்துவரை செல்ல நேரிடுகிறது , இவர்களது மன உறவு மண பிரிவுக்கு செல்ல என்ன காரணம்? இறுதியில்  விவாகரத்து  பெற்றார்களா? இல்லையா? என்ற வினாக்களுக்கு  விடை சொல்லுகிறது எஞ்சிய கதை

இன்றைய இளம் வயதினரை பிரதிபலிக்கும் கதாப்பாத்திரத்தில் மகத்தின்  சிம்பிளான நடிப்பு  அனைவரையும்  கவரும் வகையில் உள்ளது ,தேவிகா , மானசா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில்  நிறைவாகவே நடித்துள்ளனர். இன்றைய  இளைஞர்களின்  வாழ்வியல் சூழலை  மையமாக  கொண்ட கதையினை நேர்த்தியான காட்சி அமைப்புகளுடன் இயக்கியுள்ளார் ஷென் எஸ்.ரெங்கசாமி , ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் ,சனத் பரத்வாஜின் இசை, குறிப்பாக பின்னணிஇசையும்  கதையின் நகர்வுக்கு பெரிதும் துணை நின்றுள்ளன .முதல் மூன்று பாகங்களில்  வேகம்  கூட்டியிருந்தால் இன்னுமும்  கதையோட்டம் பெரிதும் ஈர்த்திருக்கும் .

காதலும் ,கவர்ச்சியும் நிறைந்த இந்த தொடர், சம கால வாழ்வியலை யதார்த்தமாய் வெளிப்படுத்துவதால் இன்றைய  இளைஞர்களை பெரிதும் கவரும்.

Spread the love