Thursday, June 18

சினிமா

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

சினிமா
தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா - ' ஹிருதயம்' படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப...
மைக்கேல்’- திரைவிமர்சனம்

மைக்கேல்’- திரைவிமர்சனம்

சினிமா
’மைக்கேல்’ திரைவிமர்சனம் தனது தாய்க்கு துரோகம் இழைத்த , தனது அப்பாவை தேடி இளம் வயதில் மும்பைக்கு வரும் கதாநாயகன் மைக்கேலுக்கு {சந்தீப் கிஷன்}மும்பையின் டான் குருநாத்துடன் {கௌதம் மேனன்} அறிமுகம் ஏற்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் குருநாத்தை( கௌதம் மேனன்) காப்பாற்றும் மைக்கேல், அதன்பின் கவுதம் மேனனின் பாதுகாப்பிலேயே வளருகிறார். வாலிப வயதை அடையும் நாயகன் மைக்கேல், கௌதம் மேன னின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமாகிறார். குருநாத், டெல்லியில் உள்ள தீரா (திவ்யன்ஷா கௌஷிக்) என்ற பெண்ணையும் அவரது தந்தையையும் கொல்லும்படி மைக்கேலுக்கு கொடுக்கும் அசைமென்ட்டை ஏற்று டெல்லிக்கு செல்லும் மைக்கேல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிக்க முடிந்ததா? திட்டப்படி அந்தப் பெண்ணை கொன்றாரா? இல்லையா? இது போன்ற பல வினாக்களுக்கு விடை தருகிறது மீதி படத்தின் திரைக்கதை. கதையின்நாயகனாக மைக்கேலாக வரும் ச...
தி கிரேட் இண்டியன் கிச்சன்’-திரைவிமர்சனம்

தி கிரேட் இண்டியன் கிச்சன்’-திரைவிமர்சனம்

சினிமா
குடும்ப கதை திரைப்படங்களில் குறைந்துவிட்ட காலகட்டத்தில் , குடும்ப கதை என்பதைவிட இந்திய குடும்ப ங்களை பிரதிபலிக்கும் கதை என்ற வகையில் உருவாகியுள்ளது இந்த‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ சமையல்தொடங்கி அன்றாடவாழ்வியலில் நடைமுறைகள் என அனைத்திலும் பழைய பஞ்சாங்கமான ராகுல் ரவீந்திரனை மணந்து கணவன் வீட்டுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் ,கணவர் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களுக்கு காலை முதல் இரவு வரை சமைப்பதும் , பரிமாறுவதும் , வீட்டை சுத்தம் செய்வதுமாய் ஓயாத உழைப்பை தரும் விதமாக அவரது வாழ்கை நகர்கிறது ,இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பது இந்த படத்தின் மீதி கதை . வீட்டைச் சுற்றியே கதை பயணித்தாலும் பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த வித சலிப்பும் தராத வகையில் சிறப்பான கேமரா கோணங்களை கொண்டு கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். படத்தொகுப்பில் லியோ...
நான் கடவுள் இல்லை- திரைவிமர்சனம்

நான் கடவுள் இல்லை- திரைவிமர்சனம்

சினிமா
தமிழ் சினிமாவில் பல புரட்சி கதை அம்ச திரைப்படங்களை வழங்கிய மற்றும் பல திறமைசாலி கலைஞர்களையும் அறிமுகபடுத்திய புகழ் பெற்ற இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, பருத்திவீரன் சரவணன், சாக்ஷி அகர்வால், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை. தான் சிறைக்கு க்கு போக காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என உறுதியாக இருக்கும வீரப்பன் (சரவணன்)அதேபோல் சிறையிலிருந்து வந்து நீதிபதி வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை கொன்று விட்டு சமுத்திரகனியையும் பழிவாங்க துடிக்கிறார். பின்பு சமுத்திரகனியின் மகளையும் கடத்தி விடுகிறார்.இந்த கதையோட்டதினுடையே எஸ்ஏ சந்திரசேகர், யார் கடிதத்தின் மூலம் என்ன உதவி கேட்டாலும் அதைகடவுள் போல நிறைவேற்றி வரும் நிலையில், சமுத்திரகனியினை சரவணனிடறிந்து காப்...
பொம்மை நாயகி -திரை விமர்சனம்

பொம்மை நாயகி -திரை விமர்சனம்

சினிமா
கடலூரில் தேநீர் கடை தொழிலாளியாக உள்ள வேலு (யோகி பாபு), தனது மனைவி கயல்விழி (சுபத்ரா), 9 வயது மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி) ஆகியோர் அடங்கிய எளிய குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் கோயில் திருவிழாவில் காணாமல் போகும் மகளைப் தேடிச் செல்லும் வேலு, அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஸ்ரீமதி உள்ளாக்கப்பட்டுள்ளதை அறிந்து குமுறுகிறார் அந்த ஊர்க்காரர்களின் சமாதான முயற்சிகளை புறம்தள்ளிவிட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்.அந்த குற்றவாளிகள் நீதியின் முன்பு தண்டிக்கப்பட்டார்களா? வேலுவின் போராட்டத்திருக்கு நியாயம் கிடைத்ததா ? இல்லையா ?போன்ற வினாக்களுக்கு விடை படத்தின் மீதி கதையில் உள்ளது. இந்த படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் ஷான்.எளிய மக்களின் வாழ்வியலில் சட்டம் எந்த அளவுக்கு அவர்களுக்கு பாதுகாப்பு தருகிறது ? நீதியின் முன் குற்றவாளிகள் தண்டனை பெற்றாலும் பாதி...
தலைக்கூத்தல்- திரை விமர்சனம்

தலைக்கூத்தல்- திரை விமர்சனம்

சினிமா
தந்தை மீது மகன் வைத்துள்ள பாசப் போராட்ட கதையின் காட்சிப்பதிவுதான் இந்த தலைக்கூத்தல் படம் ,கதையின் நாயகனான சமுத்திரகனி பழனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் இரவு நேர வாட்ச்மேனாக வேலை செய்கிறார் ,அவருடன் உடல்நலமின்றி இருக்கும் அவரது தந்தை முத்து (கலைச் செல்வன்), மனைவி கலைச்செல்வி (வசுந்தரா) மற்றும் மகளும் வாழ்ந்து வருகிறார்கள் . சமுத்திரகனி தந்தையின் மருத்துவ சிகிச்சை செலவிற்காக வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்குதை அறியும் அவரது மனiவி வசுந்தரா கணவனிடம் சண்டை போடுகிறார். பின்பு தன் மாமனாருக்கு தலைக்கூத்தல் முறையில் கொலை செய்யுமாறு வற்புறுத்துக்கிறார். ஆனால் இதற்கு உடன்படாத சமுத்திரகனி தன் தந்தையை கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வசுந்தரா வீட்டை விட்டே சென்று விடுகிறார். கடைசியில் இறுதியில் வசுந்தராவின் எண்ணம்போல் தலைக்கூத்தல் நிகழ்வு அங்கு நடந்ததா...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு

சினிமா
அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரின் நாயகர்களில் ஒருவரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார். 'சுழல் - தி வோர்டெக்ஸ்', 'வதந்தி - தி ஃபேபுள் ஆஃப் வெலோனி' ஆகிய அசல் தொடர்களை அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் அமேசான் பிரைம் வீடியோ, அடுத்ததாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரைத் தயாரித்து வழங்குகிறது. பிப்ரவரி பத்தாம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவிருக்கும் 'ஃபார்ஸி' தொடரில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோருடன் ராசி கண்ணா, ரெஜினா கஸண்ட்ரா, கே.கே. மேனன், அமோல் பலேகர், ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா, குப்ரா சையத் உள்ளிட்ட பலர்...
ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!!

ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!!

சினிமா
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் DQ-வின் முரட்டுத்தனமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்கு...
மார்ச் 18, 2023 அன்று மலேசியாவில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் நடைபெற உள்ள ‘Sounds of the South’ கான்செட்டில் சந்தோஷூடன் இணையுங்கள்

மார்ச் 18, 2023 அன்று மலேசியாவில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் நடைபெற உள்ள ‘Sounds of the South’ கான்செட்டில் சந்தோஷூடன் இணையுங்கள்

சினிமா
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக தன் பர்ஃபாமென்ஸ்க்காக மேடையேறும்போது அந்த மேஜிக்கை அனுபவிக்கவும் கொண்டாடவும் தயாராகுங்கள்! இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் இருந்து பெற்ற கூறுகள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்களையும், ஆர்வலர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமான இசையைக் கொடுத்து வருகிறார். மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை அடுத்து, தற்போது அவர் தமிழ் இசையை உலகிற்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற சர்வதேச அளவிலான வெற்றி மற்றும் நீயே ஒளி பாடல் அதன் வெப்பமூட்டும் இசைக்காக ஜூனோ விருதுகள் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் இருந்து அவருடைய தனித்துவமான தயாரிப்பு பாணி புலப்படும். மார்ச் 18, ...
இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் “சண்டே” ( Sunday ) !!!

இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் “சண்டே” ( Sunday ) !!!

சினிமா
Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் சண்டே படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாலிவுட் சைஃபை படங்கள் இங்கு திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம் தாய்மொழியில் அதிகமாக சயின்ஸ் பிக்சன் படங்கள் உருவாவதில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில், இந்தியாவில் முதல் முறையாகத் தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது “சண்டே” திரைப்படம். இப்படத்தின் கதை திரைக்கதையை இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இருவருமாக இணைந்து இப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்த...