தமிழ் சினிமாவில் பல புரட்சி கதை அம்ச திரைப்படங்களை வழங்கிய மற்றும் பல திறமைசாலி கலைஞர்களையும் அறிமுகபடுத்திய புகழ் பெற்ற இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, பருத்திவீரன் சரவணன், சாக்ஷி அகர்வால், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை.

தான் சிறைக்கு க்கு போக காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என உறுதியாக இருக்கும வீரப்பன் (சரவணன்)அதேபோல் சிறையிலிருந்து வந்து நீதிபதி வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை கொன்று விட்டு சமுத்திரகனியையும் பழிவாங்க துடிக்கிறார். பின்பு சமுத்திரகனியின் மகளையும் கடத்தி விடுகிறார்.இந்த கதையோட்டதினுடையே எஸ்ஏ சந்திரசேகர், யார் கடிதத்தின் மூலம் என்ன உதவி கேட்டாலும் அதைகடவுள் போல நிறைவேற்றி வரும் நிலையில், சமுத்திரகனியினை சரவணனிடறிந்து காப்பாற்றுங்கள் என லெட்டர் கிடைக்க இதனால் அடுத்து என்ன நிகழ்வுகள் நடகிறது ? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சமுத்திரகனி,நாயகியாக வரும் இனியா, ஆக்ஷனில் அசத்தியுள்ள சாக்ஷி அகர்வால், வில்லனாக சரவணன் என அனைவரும் நிறைவான நடிப்பை தந்துள்ளார்கள் , எஸ்ஏ சந்திரசேகர் ஒரு கடவுள் அவதாரம் போல படத்தில் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியும் காட்சிகளுக்கு இணக்கமான பின்னணி இசையும் நன்கு அமைக்கப்பட்டுள்ளது மகேஷ் கே தேவ்-வின் ஒளிப்பதிவு இயக்குனரின் வேகத்துக்கு வலு சேர்க்கிறது
‘நான் கடவுள் இல்லை’-ஜனரஞ்சகமான ஆக்ஷன் திரைவிருந்து.
