தந்தை மீது மகன் வைத்துள்ள பாசப் போராட்ட கதையின் காட்சிப்பதிவுதான் இந்த தலைக்கூத்தல் படம் ,கதையின் நாயகனான சமுத்திரகனி பழனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் இரவு நேர வாட்ச்மேனாக வேலை செய்கிறார் ,அவருடன் உடல்நலமின்றி இருக்கும் அவரது தந்தை முத்து (கலைச் செல்வன்), மனைவி கலைச்செல்வி (வசுந்தரா) மற்றும் மகளும் வாழ்ந்து வருகிறார்கள் . சமுத்திரகனி தந்தையின் மருத்துவ சிகிச்சை செலவிற்காக வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்குதை அறியும் அவரது மனiவி வசுந்தரா கணவனிடம் சண்டை போடுகிறார். பின்பு தன் மாமனாருக்கு தலைக்கூத்தல் முறையில் கொலை செய்யுமாறு வற்புறுத்துக்கிறார். ஆனால் இதற்கு உடன்படாத சமுத்திரகனி தன் தந்தையை கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வசுந்தரா வீட்டை விட்டே சென்று விடுகிறார். கடைசியில் இறுதியில் வசுந்தராவின் எண்ணம்போல் தலைக்கூத்தல் நிகழ்வு அங்கு நடந்ததா? இல்லையா ? என்பதே மீதிக்கதை.

மனித உறவுகளின் மேன்மையையும், நடைமுறை வாழ்வியல் சிக்கலால் அதன் மதிப்பு குறைதலையும் சித்தரிக்கும் வண்ணம் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ‘தலைக்கூத்தல்’படத்தை நன்கு இயக்கியுள்ளார்

மகனாக சமுத்திரக்கனி அப்பா மீது அளவற்ற அன்புடன் தந்தையை கண்ணும் கருத்துமாய் கவனித்துகொள்கிறார் இவருக்கு பேர் சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்றாய் என்றும் நிலைத்து நிற்கும் வண்ணம் சிறப்பாக நடித்துள்ளார்.கணவன், மாமனார், மகள், குடும்பம் என்ற வாழ்வியல் போராட்டத்தில் உழலும் சராசரி பெண்ணின் கதாபாத்திரத்தில் வசுந்தரா நிறைவாக நடித்துள்ளார்,

இளமைகால அப்பாவாக கதிர், மற்றும் கதாநந்தி, தந்தையாக கலைச்செல்வன் என அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மை உணரித்து நன்கு நடித்துள்ளார்கள்கண்ணன் நாராயணனின் இசையும் , மார்ட்டின் டான்ராஜின் ஒளிப்பதிவும் ,டேனி சார்லஸின் படத்தொகுப்பும் கதையின் நகர்வுக்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளது

உறவுகளின் மேன்மையை உரக்க சொல்லும் கதை ,பலரின் மனதை உரசி பார்க்கும் திரைக்கதையுடன் சிறப்பான படம் .
