கடலூரில் தேநீர் கடை தொழிலாளியாக உள்ள வேலு (யோகி பாபு), தனது மனைவி கயல்விழி (சுபத்ரா), 9 வயது மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி) ஆகியோர் அடங்கிய எளிய குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் கோயில் திருவிழாவில் காணாமல் போகும் மகளைப் தேடிச் செல்லும் வேலு, அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஸ்ரீமதி உள்ளாக்கப்பட்டுள்ளதை அறிந்து குமுறுகிறார் அந்த ஊர்க்காரர்களின் சமாதான முயற்சிகளை புறம்தள்ளிவிட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்.அந்த குற்றவாளிகள் நீதியின் முன்பு தண்டிக்கப்பட்டார்களா? வேலுவின் போராட்டத்திருக்கு நியாயம் கிடைத்ததா ? இல்லையா ?போன்ற வினாக்களுக்கு விடை படத்தின் மீதி கதையில் உள்ளது.
இந்த படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் ஷான்.எளிய மக்களின் வாழ்வியலில் சட்டம் எந்த அளவுக்கு அவர்களுக்கு பாதுகாப்பு தருகிறது ? நீதியின் முன் குற்றவாளிகள் தண்டனை பெற்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற உண்மையை உணர்த்தும் வகையில படத்தை உருவாக்கியுள்ளார்.

இன்றைய திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்த இடத்தில் உள்ள நடிகர் யோகி பாபுவை பல திரைப்படங்களில் வேறுபட்ட நகைச்சுவை பாத்திரங்களில் நாம் பார்த்து ரசித்து இருந்தாலும் இது போன்ற சில படங்கள் அவரது மாறுபட்ட நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைவதுண்டு, இந்த பொம்மை நாயகியில் .பாசமுள்ள தகப்பனாய் , மகளுக்காக போராடும் தந்தையின் மொத்த உருவாய் சிறப்பாக நடித்துள்ளார் யோகிபாபு .
யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா,மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி இருவரும் குறையின்றி நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் மேலும் ஜிஎம்.குமார், ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது யதார்த்தமான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்
அதிசயராஜின் ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தியின் இசையும் கதையின் நகர்வுக்கு பக்க பலமாய் உள்ளன, புதிய பரிமாணத்தில் யோகிபாபு நடித்துள்ள ,இந்த பொம்மை நாயகி, எளிய மக்களின் வாழ்வியலை நன்கு பதிவு செய்துள்ளது
