’மைக்கேல்’ திரைவிமர்சனம்

தனது தாய்க்கு துரோகம் இழைத்த , தனது அப்பாவை தேடி இளம் வயதில் மும்பைக்கு வரும் கதாநாயகன் மைக்கேலுக்கு {சந்தீப் கிஷன்}மும்பையின் டான் குருநாத்துடன் {கௌதம் மேனன்} அறிமுகம் ஏற்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் குருநாத்தை( கௌதம் மேனன்) காப்பாற்றும் மைக்கேல், அதன்பின் கவுதம் மேனனின் பாதுகாப்பிலேயே வளருகிறார். வாலிப வயதை அடையும் நாயகன் மைக்கேல், கௌதம் மேன னின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமாகிறார். குருநாத், டெல்லியில் உள்ள தீரா (திவ்யன்ஷா கௌஷிக்) என்ற பெண்ணையும் அவரது தந்தையையும் கொல்லும்படி மைக்கேலுக்கு கொடுக்கும் அசைமென்ட்டை ஏற்று டெல்லிக்கு செல்லும் மைக்கேல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிக்க முடிந்ததா? திட்டப்படி அந்தப் பெண்ணை கொன்றாரா? இல்லையா? இது போன்ற பல வினாக்களுக்கு விடை தருகிறது மீதி படத்தின் திரைக்கதை.
கதையின்நாயகனாக மைக்கேலாக வரும் சந்தீப் கிஷனின் உடல் மொழியும் தோற்றமும் ஆக்ஷன் ஹீரோவுக்கு ஏற்ற வகையில் நன்கு பொருத்தமாக உள்ளது, தொடர்ந்து பல நல்ல ஆக்சன் கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்க இந்தபடம் ஒரு அடித்தளமாக அமையலாம்.

இயக்குனராக பல படங்களில் ரசிகர்களை கவர்ந்த கௌதம் மேனன் நடிப்பிலும் “தாதா”கதாபாத்திரத்தில் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களிடம் தனி கவனம் பெறுகிறார் படத்தின் ஹைலைட் ஆக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி வழக்கம் போல தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளார். சமீபத்திய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வரலட்சுமி இந்த படத்திலும் தன்னுடைய அதிரடி நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்
‘புரியாத புதிர்’ ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி காதலும் ஆக்ஷனும் கலந்த கதைக்களத்துடன் மைக்கேலை தந்துள்ளார் ,ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உறுதுணையாக நின்று கதைக்கு ஏற்ற காட்சிபதிவுகளை வழங்கியுள்ளது .ஆக்ஷன் படங்களுக்கு ஏற்ற வகையில் சாம் சி.எஸ். பின்னணி இசையில் நன்கு ஸ்கோர் செய்துள்ளார் சூப்பர். R. சத்தியநாரயணனின் படத்தொகுப்பு சண்டை காட்சிகளில் விறுவிறுப்பினை கொடுத்து பாராட்டு பெறுகிறது
அக்ஷன், காதல் கலந்த மைக்கேல் இளம் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கும் படமாய் அமையும்.
