Thursday, June 18

சினிமா

அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யா வின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இயக்குனர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன்.

அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யா வின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இயக்குனர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன்.

சினிமா
அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைபடங்களுக்கான விருது வழங்கும் செடோனா சர்வதேச திரைப்பட விழா புகழ் பெற்ற ஆஸ்கார் விருது வெற்றியாளர்களால் 1994 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டவை. பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்று கவுரவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 2002 ஆம் ஆண்டு கொலம்பியா ஹைஸ்கூல் மஸாக்கர் என்ற அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் பற்றிய டாக்குமென்டரி படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மைக்கேல் மூர் அவர்கள் கடந்த 2010 பத்தாம் ஆண்டு இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்று கௌரவிக்கப்பட்டார். பிப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெறும் இந்த 29வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் இரண்டு முறை பி...
மணிகண்டன் நடிக்கும் ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மணிகண்டன் நடிக்கும் ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்' 'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'. இதில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநர...
பிப்ரவரி 10 வெளியாகும் டாடா’ திரைப்படத்தின்  இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழா

பிப்ரவரி 10 வெளியாகும் டாடா’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழா

சினிமா
ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது. இதன் இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது கவின் -அபர்ணாதாஸ் நடித்துள்ள ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10, 2023 ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  படத்தில் இருந்து வெளியான ஹிட் பாடல்கள் மற்றும் அதன் காட்சிகள் அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது. கவின் மீது ரசிகர்கள் மத்தியில் இருக்கக்கூடிய புகழ் குறிப்பாக பெண் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய புகழ் இந்த படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட இதன் ஆடியோ மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. படத்தி...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

சினிமா
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்'  இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக 'தண்டகாரண்யம்' படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் தினே...
“கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம்..” என்ற தலைப்பில் நடிகர் ராஜ்கிரண் கட்டுரை 

“கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம்..” என்ற தலைப்பில் நடிகர் ராஜ்கிரண் கட்டுரை 

சினிமா
சமீபத்தில் உழவன் பவுண்டேசன் மூலம் உழவர் விருதுகள் வழங்கினார், நடிகர் கார்த்தி.விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி ​​தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படடது.அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்கிரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை கவுரவப் படுத்தினார். இதை பற்றியும் , நடிகர் கார்த்தி பற்றியும் சமீபத்தில் அவரது முக நூலில்.. "கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம்.." என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம். அதை உணர்ந்திருப்பதால் தான், அண்ணன் சிவகுமார் அவர்களின் புதல்வர்கள், தம்பி சூர்யா அவர்கள், "அகரம் பவுண்டேஷன்" மூலமாக கல்வி உதவிகளைச்செய்து வருகிறார். தம்பி கார்த்தி அவர்கள், "உழவன் பவுண்டேஷன்" மூலமாக உழவர்களை ...
சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சினிமா
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை 'சூப்பர் ஸ்டார்' சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் 'வசந்த முல்லை'. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'நேரம்', 'பிரேமம்' படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரி...
நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் வடக்குபட்டி ராமசாமி படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி  தயாரிக்கிறது

நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் வடக்குபட்டி ராமசாமி படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி  தயாரிக்கிறது

சினிமா
நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் வடக்குபட்டி ராமசாமி படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி  தயாரிக்கிறது இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் இணைத் தயாரிப்பாளர் விவேக் குச்சிபோட்லா. இப்படத்தை டிக்கிலோனா புகழ் கார்த்திக் யோகி இயக்குகிறார். இதில் மேகா ஆகாஷ் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் கவுண்டமணி சாரின் மிகப்பெரிய ரசிகர். மேலும் அவரது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ கூட கவுண்டமணி சாரின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான். 'வடக்குப்பட்டி ராமசாமி' ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புகிறோம். மற்ற நடிகர்கள் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள...
எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்

சினிமா
'கீத கோவிந்தம்' படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிளாக் பஸ்டர் வெற்றியான 'கீத கோவிந்தம்' படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும். ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது. நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்....
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

சினிமா
கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு 'லக்கி மேன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 'லக்கி மேன்' திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள். சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம். எனவே, யோகிபாபு உண்மையில் ஒரு 'லக்கி மேன்' தானா என்பதை அறிய அவரது இந்த ஃபீல் குட் பயணத்தில் இணையுங்கள். ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இங்குள்ள குறைவாக பே...
ரன் பேபி ரன்- திரை விமர்சனம்

ரன் பேபி ரன்- திரை விமர்சனம்

சினிமா
தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வரும் சத்யாவுக்கும் (ஆர்.ஜே பாலாஜி), இஷா தல்வாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில்,ஒரு நாள் அவருடைய காரில், தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒளிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் . தனது உயிருக்கு ஆபத்து என்றும் சிறிது நேரம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க உதவும்படியும் தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) வேண்டுகோள் விடுக்கிறார். ஆரம்பத்தில் தயங்கும் சத்யா (ஆர்.ஜே. பாலாஜி) பிறகு பரிதாபப்பட்டு அடைக்கலமும் தருகிறார்.இதனால் அவருக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து சத்யா(ஆர்.ஜே.பாலாஜி) மீண்டு எப்படி வெளி வந்தார்? , தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) எதனால்?எந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டார் ?இது போன்ற விடை தெரிய வினாக்களுக்கு தீர்வை சொல்லுகிறது மீதி படத்தின் கதை. தான் இதுவரை நடித்த படங்களில் தன்னுடைய டைமிங் காமெடியினாலும் சரவெடி தொட...