Sunday, April 19

Author: admin

நடிகர் ஜெய் நடிப்பதோடு இசையமைப்பாளாராகவும்  அறிமுகமாகும் வீரபாண்டியபுரம் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளிவருகிறது

நடிகர் ஜெய் நடிப்பதோடு இசையமைப்பாளாராகவும் அறிமுகமாகும் வீரபாண்டியபுரம் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளிவருகிறது

சினிமா
நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், கிராம பின்னணியில் உருவாகியுள்ள படம் “வீரபாண்டியபுரம்”. நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராமத்து லுக்கில் தோன்றியுள்ள நடிகர் ஜெய் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். இப்படத்தை Lendi Studios சார்பில் S .ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் ஜோடியாக நடிகை மீனாட்சி நடித்துள்ளார். மேலும் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.இசை - ஜெய் ஒளிப்பதிவு - R. வேல்ராஜ், பாடல்கள் - வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி. திண்டுக்கல்லை சுற்றி எடுக்கப்பட்ட வீரபாண்டியபுரம் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளி வருகிறது....
‘மகான்’ படத்தை கொண்டாடும்  ரசிகர்களின்  மோட்டார் சைக்கிள் பயணம்

‘மகான்’ படத்தை கொண்டாடும் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்

சினிமா
சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்தமாக பெரும் பாராட்டுகளைப் குவித்து வருகிறது. திரையில் தீப்பொறி பறக்க சீயான் விக்ரம் மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் திரும்பியுள்ளார். சீயான் விக்ரம் அவர்களின் 60 வது படமான "மகான்" படத்தை கொண்டாடும் வகையிலும், சீயான் விக்ரம் அவர்களின் கடும் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரின் ரசிகர்கள் 60 பேர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, தாங்கள் மிகவும் நேசிக்கும் நடிகரின் 60வது திரைப்படத்தின் புகழை பரப்பி வருகின்றனர் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை முழுவதுமான பகுதிகளில் பைக் ஓட்டி, சியான் விக்ரமின்...
27 ஆண்டுகள் சிறைவாசத்திற்க்கு பின் மண்டேலா விடுதலை பெற்ற  நாள்  பிப்ரவரி  11

27 ஆண்டுகள் சிறைவாசத்திற்க்கு பின் மண்டேலா விடுதலை பெற்ற நாள் பிப்ரவரி 11

கல்வி, செய்திகள்
மக்களின் தலைவன் நெல்சன் மண்டேலா வாழும் போதும் சரி, வாழ்க்கைக்கும் பின்னும் சரி, வாழும் மனிதர்கள் சிலபேர்தான் இந்த வையகத்தில் உண்டு என்று சொல்லலாம் அவர்கள் தனக்கென வாழாமல் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள், அப்படிட்ட மாபெரும் தலைவனாய் வாழ்ந்தவர்தான் நெல்சன் மண்டேலா. மண்டேலா, 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்.  படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் பகுதி நேரத்தில் சட்டக்கல்வியும் படித்தார். தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அவர்களுக்காக குரல் கொடுத்த மண்டேலா 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் நடைபெற்றுவதை அறிந்து கொண்ட மண்டேலா தீவிரமான அரசியலுக்குள் ஈ...
‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு

‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு

சினிமா
நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக உங்களால் ‘மேகம்’ பாடலை மிஸ் செய்ய முடியாது. நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம்பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த் வசந்தா பாடி இசையமைத்துள்ளார், வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மேகம்’ பாடல் குறித்தும், கோவிந்த் வசந்தா குறித்தும் பேசும் இயக்குநர் பிருந்தா மாஸ்டர், “தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் முன்னணி பாடகராகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் அவரை அறிந்திருந்தோம். மேடையில் அவர் பலமுறை வழங்கிய தாய்க்குடம் ...
சிவகார்த்திகேயன் நடிப்பில்,  “SK 20” படத்தின் படப்பிடிப்பு  துவக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், “SK 20” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சினிமா
Suresh Productions-Sree Venkateswara Cinemas LLP-Shanthi Talkies வழங்கும்,ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில்,இசையமைப்பாளர் தமன் இசையில்,சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது ! 2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புகழ் ப...
இனி  அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்”  திரைப்படம் !

இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்” திரைப்படம் !

சினிமா
ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மற்றும் ஆர்வமிகு திரைப்பட காதலர்கள், இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ப்ரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி திரையிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘மகான்’, கன்னடத்தில் ‘மஹா புருஷா’ என்ற பெயரில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு முன்னதாகவே எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், திரைப்படக் காதலர்கள் வெகுஜன ரசிகர்கள் ஆகியோருக்கு, இந்தப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் என்பதற்கான முக்கிய அம்சங்கள் உங்களுக்காக இங்கே.. நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 60 வது படம் : திரையுலகில் பல சிறந்த கதைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மகான்' திரைப்படம் முன்னணி நட...
பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம் வழங்கிய தர்மபுரம் ஆதினம்

பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம் வழங்கிய தர்மபுரம் ஆதினம்

சினிமா, செய்திகள்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் "கிராமிய இசை கலாநிதி" என்கிற பட்டம் வழங்கப்பட்டதோடு தர்மபுரம் ஆதினத்தினுடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம், சிவாலயங்களுக்கு ஆஸ்த்தானபாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. "ஆன்மிக காவலர் " அகர்சந்த் அவர்கள் "தொழிலாளர் துறை அமைச்சர் " சி. வெ. கணேசன், "இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் "கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர். வேல்முருகன் அவர்களுக்கு "கிராமிய இசை கலாநிதி ...
அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!

அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!

சினிமா
சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம். தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரி...
இருமொழிகளிலும் இதயம் கவரும்  அழகான படைப்பு  “நித்தம் ஒரு வானம்”

இருமொழிகளிலும் இதயம் கவரும் அழகான படைப்பு “நித்தம் ஒரு வானம்”

சினிமா
Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” ! பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார். “நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. அசோக் செல்வன் நாயகனாக...
அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

சினிமா
  படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய். நடிகர் அருண் விஜய் ,தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் 'பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்....