மக்களின் தலைவன் நெல்சன் மண்டேலா
வாழும் போதும் சரி, வாழ்க்கைக்கும் பின்னும் சரி, வாழும் மனிதர்கள் சிலபேர்தான் இந்த வையகத்தில் உண்டு என்று சொல்லலாம் அவர்கள் தனக்கென வாழாமல் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள், அப்படிட்ட மாபெரும் தலைவனாய் வாழ்ந்தவர்தான் நெல்சன் மண்டேலா.
மண்டேலா, 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் பகுதி நேரத்தில் சட்டக்கல்வியும் படித்தார்.
தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அவர்களுக்காக குரல் கொடுத்த மண்டேலா 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் நடைபெற்றுவதை அறிந்து கொண்ட மண்டேலா தீவிரமான அரசியலுக்குள் ஈடுபட ஆரம்பித்து, அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் நடத்த முற்பட்டார் ,இவரது வன்முறையற்ற போராட்டம் மென்மேலும் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், இவரை என கைது செய்தது. ஆனால் அதற்க்கு பிறகு மேலும் தீவிர போராட் டங்களில் மண்டேலா ஈடுபட்டார் . போராட்டம் , சிறைவாசம் விடுதலைமுழக்கம் என தொடர்ந்த அவரை மீண்டும் கைது செய்தார்கள்
1962, ஆகஸ்ட் 05 ஆம் நாள் மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த குற்றம் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மேல் சுமத்தபட்டன. மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு ஜு ன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயதுதான் ஆகிஇருந்தது ஆனால் அன்று தொடங்கிய அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார் ,அதன் பின் ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே அவரைப்போல போல இவ்வளவு நீண்ட காலம் எந்த ஒரு தலைவர்களும் சிறைவாசம் கண்டதில்லை .
தனிமைச்சிறையில் பல ஆண்டுகளை கழித்த மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சிஅவரை விடுதலை செய்ய மறுத்தது . மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.”மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்னாப்பிரிக்கா அரசின்
முடிவையும் ஏற்க மறுத்த மண்டேலாவிற்க்கு தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்ததும் விடுதலைக்கான காலம் ஏற்பட்டது . அந்த மாபெரும் தலைவனின் விடுதலை நாளை உலகமே மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.
பிப்ரவரி 11, 1990 நாளன்று ,பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கியதோடு மண்டேலாவும் விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். 1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்..விடுதலை பெற்றபோது மண்டேலாவுக்கு வயது 71. அரசு அறிவித்தபடியே பிப்ரவரி 11, 1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலைச் செய்யப்பட்டார். சிறைச்சாலையின் வாசலில் ஏராளமான தலைவர்கள் மற்றும் எண்ணிலடங்காத தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தார்கள்.
1994, மே 10 ஆம் நாள் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த அந்த தன்னிகரற்ற தலைவன் 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது வயதில் மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டேதான் இருப்பார்