Wednesday, April 22

Author: admin

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை துவையலை  எளிதாக செய்வது எப்படி?

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை துவையலை எளிதாக செய்வது எப்படி?

சமையல்
பிரண்டை துவையல் தேவையான பொருட்கள் . தோல் சீவிய பிரண்டை - ஒரு கப் புளி           -         எலுமிச்சை அளவு பூண்டு      -          ஒன்று இஞ்சி       -         சிறிதளவு வரமிளகாய் -  காரத்திற்கு ஏற்ப நல்எண்ணெய் -  2 டேபிள் ஸ்பூன் கடுகு                  - சிறிதளவு . செய்முறை  வாணலில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் . பின் பிரண்டையை  போட்டு சிறிது அதன் நிறம் மாறும் வரை வதக்கவும் பிறகு புளியும் சேர்த்து வதக்கவும், இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும் . பின் அதே வாணலில் சிறுது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பிறகு ,அரைத்த பிரண்டை விழுதை சேர்த்து, மீதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் இறக்கவும். சுவையான பிரண்டை துவையல் ரெடி . இட்லி,தோசை , மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் .  பிரண்டை, முடக்கத்தான...
” மெய்ப்பட செய் ” இசை வெியீட்டு விழா

” மெய்ப்பட செய் ” இசை வெியீட்டு விழா

சினிமா
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.தயாரிப்பாளர் நடிகர் P.R. தமிழ் செல்வம் பேசியதாவது…. புதுமுகங்கள் நடி...
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

சினிமா, செய்திகள்
23 ஏப்ரல் 2022 இலண்டன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.முன்னதாக ஐக்கிய England தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக England பாராளுமன்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவிற்கு England பாராளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் அவர்கள் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் 2022 நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் England தமிழ்துறை குழுவினருடன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, நன்கொடைக்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினருக்கு வழங்கினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. ...
Srinivasaa Silverscreen ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில் “ தி வாரியர்”  திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ‘புல்லட் பாடல்’ வெளியீடு !

Srinivasaa Silverscreen ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில் “ தி வாரியர்”  திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ‘புல்லட் பாடல்’ வெளியீடு !

சினிமா
Srinivasaa Silverscreen ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில், இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் “தி வாரியர்” திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார்.  அப்பாடலின் லிரிகல் வீடியோ வெளியீட்டு  விழா திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.   இந்நிகழ்வினில் பாடலாசிரிய விவேகா பேசியதாவது.. இந்நிகழ்வை பார்க்கவே  நன்றாக உள்ளது.  நாளைய தமிழகம் உதயநிதி இங்கு வந்ததற்கு வாழ்த்துக்கள். லிங்குசாமியின் முதல் படத்திலிருந்து நான் பாடலை எழுதி வருகிறேன். அவர் முதல் படத்திலிருந்த அதே வேகத்துடன் அதே தீரத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளேன். பிரபுதேவா சிம்பு இருவரும் பாடலை ...
சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா

சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா

சினிமா
சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள 'ஹே சகோ ' இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள்.பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர். இவ்விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது "இந்தப் பாடலைப் பார்த்த போது ஒரு நேர்நிலையான அதிர்வலைகள் பரவுவதை உணர முடிகிறது. கலை வடிவத்தின் நோக்கம் என்று கூறினால் அந்த வடிவம் ஏதாவது ஒரு வகையில் அன்பையும் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் ஓர் அங்குல அளவிலாவது ஏற்படுத்தி உயர்த்த வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது.சிறுவன் யோகேஸ்வரன் நன்றாக செய்துள்ளான். நான்...
ஜீவி-2 படத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் மாநாடு படத் தயாரிப்பாளர்

ஜீவி-2 படத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் மாநாடு படத் தயாரிப்பாளர்

சினிமா
வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது.. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும்...
நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

சினிமா
பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக மனோபாலா ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் அவருக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல உயர் கல்வி நிறுவனமான சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை மனோபாலாவின் நீண்டகால திரைப்பணிக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவரும் பூச்சி முருகனுக்கும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மனோபாலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உ...
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

சினிமா
நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் த...
அசத்தலான குடும்ப சித்திரமாக, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் “ஓ மை டாக்” திரைப்படம், பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது !

அசத்தலான குடும்ப சித்திரமாக, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் “ஓ மை டாக்” திரைப்படம், பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது !

சினிமா
பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” ! அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, 'ஓ மை டாக்', படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய அழகான கதையை சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் அன்பைப் பெற்று வருகிறது, அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளைப் பகி...
ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது

ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது

சினிமா
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவாரத்தை வெளிப்...