Wednesday, April 22

Author: admin

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!

சினிமா, செய்திகள்
ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில்,தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது… நமது திரைத்துறையை சார்ந்த திருமதி ரோஜா அவர்கள் ஆந்திராவில் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சராகி இருப்பது நமது திரைத்துறைக்கும், தெலுங்கு திரைத்துறைக்கும் பெருமை. இந்த நிலைக்கு வர, அவரின் பெரும் உழைப்பு காரணம் என்பது நீங்கள் அறிந்ததே. அவ...
டாணாக்காரன்’ திரையிடலைப் பார்த்த  காவலர்கள்  இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்

டாணாக்காரன்’ திரையிடலைப் பார்த்த காவலர்கள் இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்

சினிமா
மக்களுக்காக தரமான படங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’. ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்புகளைக் குவித்து வரும் ‘டாணாக்காரன்’ படமும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஓர் உதாரணம். மக்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி, சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்களும் ‘டாணாக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தற்போது ‘டாணாக்காரன்’ படத்துக்கு மேலும் ஒரு பெருமைக் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் ’டாணாக்காரன்’ திரையிடப்பட்டுள்ளது. அங்குப் பயிற்சி பெற்று வரும் காவலர்கள் அனைவருமே படத்தை கண்டுகழித்துள்ளனர். காவலர் பயிற்சி ப...
அக்கா குருவிபடத்தின் இசைவெளியீட்டு விழா

அக்கா குருவிபடத்தின் இசைவெளியீட்டு விழா

சினிமா
இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் பேசியதாவது: இயக்குனர் அமீர் பேசியபோது, இயக்குனர் சாமி அவர்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக பெரிய நட்புறவு என்று எதுவும் கிடையாது. இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அழைத்திருந்தார். அப்போது என்ன படம் இயக்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, உயிர், மிருகம் படங்களை இயக்கியுள்ளேன் என்றார். நான் உயிர் படத்தை மட்டும் பார்த்துள்ளேன். மற்ற படங்களை பார்க்கக் கூடிய சூழல் இல்லை. இந்த விழாவிற்கு நான் வந்ததன் காரணம் சாமி என்கின்ற படைப்பாள...
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்

சினிமா
சென்னை, ஏப்ரல் 26, 2022: இந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது பயணத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் என் எஃப் டி (NFT) திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவிஸ், மிகக் குறுகிய காலத்தில் திரைத்துறையையும் தாண்டி கவனத்தை ஈர்த்து வருகிறது . திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை நிறுவியுள்ளனர். என் எஃப் டி (NFT), அதாவாது நான் ஃபங்கபிள் டோக்கன் (non-fungible token) என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான முறையில் கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற சொத்துகளை ஆன்லைனில் வாங்குவதற்கும், விற்பதற்கும், உரிமம் பெறுவதற்குமான முறையாகும். இதில்...
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

சினிமா, செய்திகள்
சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.   சென்னை மாநகர காவல்துறை, 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்....
விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது

விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது

சினிமா
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம் மும்பை, இந்தியா—26 April, 2022 —அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் 6 May முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் ம...
அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் ‘ஓ மை டாக்’ என்ற படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்..?!

அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் ‘ஓ மை டாக்’ என்ற படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்..?!

சினிமா
அமேசான் ஒரிஜினல்ஸின் 'ஓ மை டாக்'- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்' என குறிப்பிட்டு, 'ஓ மை டாக்' படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள். 'ஓ மை டாக்' திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம். 1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..! 'ஓ மை டாக்' - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக பின்னப்பட்ட அழகான கதை. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய...
 லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி

 லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி

சினிமா
லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா ! லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை. மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன். எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. காக்க காக்க படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களிடம் இவ்வளவு அழகான கட்டமைப்பு உள்ளது. நான் இங்கு உள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. சூர்யா சார், விஜய் சார், வி...
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர்.

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர்.

சினிமா
‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். 'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... '' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவ...
சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா

சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா

சினிமா
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹ...