Infiniti Film Ventures வழங்கும், CS அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன், துவங்கியது !
Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில்,நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது !
விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது.
“ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ...









