Thursday, April 23

Author: admin

பாடகர்  திருமூர்த்தியை உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

பாடகர் திருமூர்த்தியை உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

சினிமா
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார். திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். தி...
சுழல் – வெப் சீரிஸ் – விமர்சனம்

சுழல் – வெப் சீரிஸ் – விமர்சனம்

சினிமா
ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல்அனைத்து தரப்பு இணையதள ரசிகர்களையும் கவர்ந்து பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது ,புஷ்கர் & காயத்ரி, அவர்கள் உருவாக்கிய கண்கவர் டிஜிட்டல் உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்லும் இந்த நீண்ட அசல் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் தமிழ் தொடரில் ஆர் பார்த்திபன் ,ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி உட்பட பல திறமையான நடிகர்கள் குழுவுடன், அனுசரண் .எம் மற்றும் பிரம்மா இயக்கிய இத்தொடரின் காட்சிகள் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரின் அனைத்து அத்தியாயங்களும் எதிர்பாராத திருப்பங்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு. அவர்களின் அற்புதமான நடிப்பு. தரமான பின்னணி இசை என தொடரின் எட்டு அத்தியாயத்தையும் முழு ரசிப்புடன் காணலாம்.பார்த்திபன் அவர்கள் அப்பாவ...
“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

சினிமா
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”.  ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.   இவ்விழாவினில் பாடலாசிரியர் தீபிகா பேசுகையில்.., சந்தீப் எனது பள்ளி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுத அவர் எனக்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜானு சந்தர் எங்கள் வகுப்புத் தோழரும் கூட. நண்பர்களுடன் இணைந்து வேலை பார்த்தது  ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி. நடிகர் ஷாம் சுந்தர் பேசுகையில்.., நான் பிரான்சிஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இயக்குனர் சந்தீப்புடன் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளேன், அவருடைய  முதல் திரைப்படத்த...
நடிகர் சரண்ராஜ் இயக்கத்தில்அவரது மகன் தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும்  படத்தின் பெயர் ‘குப்பன்’ .

நடிகர் சரண்ராஜ் இயக்கத்தில்அவரது மகன் தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் படத்தின் பெயர் ‘குப்பன்’ .

சினிமா
நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் பெயர் ‘குப்பன்’ . மகன் தேவ் சரண்ராஜ் அறிமுகம் . Soni Sri Production ‘KUPPAN” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். இந்த புதிய திரைப்படத்திற்கு “குப்பன்” என பெயர் வைத்துள்ளார்.கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார். 35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்க மாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படிதான் குப்பன் என்ற ஃபிஷர்மேன் பழக்கமாச்சி. அப்போ தான் தோணிச்சு.. ஒரு ஃபிஷ...
என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை.

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை.

இலக்கியம், சினிமா
என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை. அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் வரும் வரிகள்தான் இது. காத்தோடுதான் காத்தாக மெதப்போம் நீரோடுதான் நீராக கலப்போம் இயற்கையின் மடியில் கொஞ்சம் வா சோம்பல் முறிப்போம்… இதை எழுதியவர் வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன். இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார் இவர். தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரம்...
சவாலான கதைக்களத்தை சாமர்த்தியமாக படமாக்கிய ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! – ஊடகங்கள் பாராட்டு

சவாலான கதைக்களத்தை சாமர்த்தியமாக படமாக்கிய ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! – ஊடகங்கள் பாராட்டு

சினிமா
 2 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்! - உற்சாகத்தில் ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான ’O2’ மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள ’O2’ திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டா...
“ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

“ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

சினிமா
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான "ஜோதி" திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் "SP ராஜா சேதுபதி", இயக்குனர் "AV கிருஷ்ண பரமாத்மா", (மண்டேலா) படத்தின் நாயகி "ஷீலா ராஜ்குமார்", இசையமைப்பாளர் "ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்", பாடலாசிரியர் "கார்த்திக் நேத்தா", துணை நடிகர் "ஹரி க்ரிஷ்" ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, "Let's launch Povathengea from JOTHI" என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது.இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறத...
அம்முச்சி-2- வெப் சீரீஸ் – விமர்சனம்

அம்முச்சி-2- வெப் சீரீஸ் – விமர்சனம்

சினிமா
இளைஞர்கள் முதல் நடுத்தர வயதில் உள்ள இணையதளப்பிரியர்களின் பெரிய ஆதரவை யூடியூப்பில் பெற்றி ருந்த அம்முச்சி சீசன் 1 இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் அம்முச்சியின் இரண்டாவது சீசன் ஆக வெளியாகி இருக்கிறது. கொங்கு தமிழ் பேசும் கலைஞர்கள் முந்தைய படைப்பையும் தாண்டி தங்கள் சிறப்பான திறமையை சீசன் 2விலும் வெளிப்படுத்தியுள்ளார்கள் இயல்பான கிராமத்து கதை, யதார்த்தமான கதாப்பாத்திரங்கள்,கிராமத்து அலப்பறைகள் ,காதல் ,பஞ்சாயத்து , கலாட்டா காமெடி என இன்றைய ரசிகர்களை கவரும் கதையினை இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி நேர்த்தியாக இயக்கியுள்ளார் ,ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமாரும் இசைஅமைப்பாளர் விவேக் சரோவும் கதையோட்டத்துக்கு உறுதுணையாக உள்ளார்கள் படிக்க ஆசைப்படும் பெண்ணின் ஆசைகளுக்கு அணைபோடும் தந்தை,காதலியின் பிரச்சனைகளை தீர்க்க அவளது கிராமத்துக்கு செல்லும் ஹீரோ என செல்லும் கதை சிறந்த கதாபாத்திரங்களின் வழியே பயணி க்கி...
நட்டியுடன் ‘சாயம்’ இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் ‘கூராய்வு’

நட்டியுடன் ‘சாயம்’ இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் ‘கூராய்வு’

சினிமா
ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான 'கூராய்வு', சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார். பூஜையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தை பற்றி பேசிய ஆண்டனி சாமி, 2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். "போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல் கூராய்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த கதை. இந்த திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கை...
“விக்ரம்” பட வெற்றிக்கு வாழ்த்து கூறி, தனது குடும்பத்துடன் குரு கமலஹாசனிடம் ஆசி பெற்றுள்ளனர் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி

“விக்ரம்” பட வெற்றிக்கு வாழ்த்து கூறி, தனது குடும்பத்துடன் குரு கமலஹாசனிடம் ஆசி பெற்றுள்ளனர் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி

சினிமா
கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் பிரபல நடன இயக்குநர் ஷோபி மற்றும் அவரது மனைவி நடன இயக்குநர் லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் தனது குருவான உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து “விக்ரம்” படத்திற்கு வாழ்த்து கூறியதுடன், அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார்.   நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர். அவர் தனது கர்ப்பமாக உள்ள தனது மனைவி லலிதா ஷோபியுடன், திரைத்துறையில் அவர்களது குருவாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் கமல்ஹாசன் அவர்களை, “விக்ரம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், நடன இயக்குநர் லலிதா ஷோபி அவர்களை அக்கறையுடன் உடல்நலம் விசாரித்...