இளைஞர்கள் முதல் நடுத்தர வயதில் உள்ள இணையதளப்பிரியர்களின் பெரிய ஆதரவை யூடியூப்பில் பெற்றி ருந்த அம்முச்சி சீசன் 1 இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் அம்முச்சியின் இரண்டாவது சீசன் ஆக வெளியாகி இருக்கிறது.
கொங்கு தமிழ் பேசும் கலைஞர்கள் முந்தைய படைப்பையும் தாண்டி தங்கள் சிறப்பான திறமையை சீசன் 2விலும் வெளிப்படுத்தியுள்ளார்கள் இயல்பான கிராமத்து கதை, யதார்த்தமான கதாப்பாத்திரங்கள்,கிராமத்து அலப்பறைகள் ,காதல் ,பஞ்சாயத்து , கலாட்டா காமெடி என இன்றைய ரசிகர்களை கவரும் கதையினை இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி நேர்த்தியாக இயக்கியுள்ளார் ,ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமாரும் இசைஅமைப்பாளர் விவேக் சரோவும் கதையோட்டத்துக்கு உறுதுணையாக உள்ளார்கள்
படிக்க ஆசைப்படும் பெண்ணின் ஆசைகளுக்கு அணைபோடும் தந்தை,காதலியின் பிரச்சனைகளை தீர்க்க அவளது கிராமத்துக்கு செல்லும் ஹீரோ என செல்லும் கதை சிறந்த கதாபாத்திரங்களின் வழியே பயணி க்கிறது ,அருண் ,சசி , அம்முச்சி சின்னமணி, மாகாளிசந்திரகுமார், பிரசன்னா பாலச்சந்திரன்,தனம்,மித்ரா என அனைவரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கொங்கு வட்டார மொழியில் நகைச்சுவையும், காதலும் கலந்து கூடவே மெசேஜூம் சொல்லும் சிறந்த படைப்பான அம்முச்சி, இன்னும் பல சீசன்களை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் அம்முச்சி சீசன் 2 பார்த்து ரசித்து மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கலாம்