ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல்அனைத்து தரப்பு இணையதள ரசிகர்களையும் கவர்ந்து பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது ,புஷ்கர் & காயத்ரி, அவர்கள் உருவாக்கிய கண்கவர் டிஜிட்டல் உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்லும் இந்த நீண்ட அசல் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் தமிழ் தொடரில் ஆர் பார்த்திபன் ,ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி உட்பட பல திறமையான நடிகர்கள் குழுவுடன், அனுசரண் .எம் மற்றும் பிரம்மா இயக்கிய இத்தொடரின் காட்சிகள் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தொடரின் அனைத்து அத்தியாயங்களும் எதிர்பாராத திருப்பங்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு. அவர்களின் அற்புதமான நடிப்பு. தரமான பின்னணி இசை என தொடரின் எட்டு அத்தியாயத்தையும் முழு ரசிப்புடன் காணலாம்.பார்த்திபன் அவர்கள் அப்பாவுக்கு அப்பாவாகவும், சரியான லீடராகவும், மகளை காணாது மனம் உடையும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பில் மிளிர்கிறார் .புலனாய்வு கதையாக இருப்பினும் மயானக்கொள்ளை திருவிழாவினை கதையின் ஊடே அமைத்து ஒவ்வொரு எபிசொட் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸையும் அமைத்து திறம்பட உருவாக்கி உள்ளார்கள்
சாம்பலூர் என்னும் ஒரு மலை கிராமத்தின் தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவராக இருக்கும் ஆர் பார்த்திபன். தொழிற்சாலையின் முதலாளியான ஹரிஷ் உத்தமன். இன்ஸ்பெக்டராக ஸ்ரேயா, சப்-இன்ஸ்பெக்டராக கதிர் இவர்களுக்குள் நடக்கும் கதை ஓட்டத்தில் ஒருநாள் தொழிற்சாலை பற்றி எரிகிறது அதோடு பார்த்திபனின் இளைய மகளையும் காணவில்லை. மனைவியை பிரிந்து வாழும் பார்த்திபன் இளைய மகளுடன் மட்டும் வாழ்ந்து வருகிறார் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் வேறு இடத்தில் தனியாக வசிக்கிறார் தொழிற்சாலையை கொளுத்தியது யார்? பார்த்திபன் மகளை கடத்தியது யார்? அடுத்து நடந்தவை என்ன? என்ற சூழும் கேள்விகளுக்குகான பதில் யாவும் ‘சுழல்’ வெப் சீரிஸில் உள்ளது
முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகியிருக்கும் இத் தமிழ் தொடரின் எட்டு பகுதிகளுக்கும் இயக்குனர்கள் இரண்டாக இருந்தாலும் முழு தொடர்களுக்கும் கதைக்கேற்ற சிறப்பான ஒளிப்பதிவை முகேஷ் தந்துள்ளார்.சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளின் உயிர்நாடியாய் திகழும் இசை, அதிலும் குறிப்பாக சிறந்த பின்னணி இசையை சாம்CS வழங்கியுள்ளார் ,திரில்லர் கதைகளுக்கு மிகவும் தேவை விரைவான மற்றும் விறுவிறுப்பான கதையோட்டம், அதற்கு முக்கிய காரணி படத்தொகுப்பாகும், அந்த வகையில் ரிச்சட்கெவினின் எடிட்டிங் கதையின் வேகத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது . மொத்தத்தில் சூழல் உங்களை சுற்றி அடிக்கும் நேர்த்தியானதொரு படைப்பு ,
எட்டு பகுதிகளையும் ஒரு சேர பார்ப்பவர்களுக்கு ஒரு பக்கா முழுமையான திரில்லர் படம் பார்த்த உணர்வை உங்களுக்கு நிச்சயம் சூழல் தரும்.