Friday, January 24

பாடகர் திருமூர்த்தியை உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார்.

திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.

Spread the love