Friday, April 24

Author: admin

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்

சினிமா
Lights On  Media  வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. 'வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது...'  எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகும் “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இளம் படக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “பருந்தாகுது ஊர்க்குருவி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நா...
 இந்திய திரையுலக பிரம்மாண்டங்களின் பாராட்டைக் குவித்து வரும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

 இந்திய திரையுலக பிரம்மாண்டங்களின் பாராட்டைக் குவித்து வரும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

சினிமா
இந்திய திரை உலகத்தில் பிரம்மாண்டமான அடையாளங்களில் முதன்மையானவர்களான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் அசல் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்து 'நம்ப இயலாத படைப்பு' என வியந்து போற்றிப் பாராட்டி இருக்கிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவில், அதன் முதல் அசல் தமிழ் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. அத்துடன் திரைப்படத்துறையின் பிரபலங்களின் பாராட்டையும் தொடர்ச்சியாக குவித்து வருகிறது. படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி அவர்கள் உருவாக்கிய அசல் தொடரை இந்திய சினிமாவின் பிரம்மாண்ட அடையாளங்களில் ஒன்றான எஸ். எஸ், ராஜமவுலி, நடிகை பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் பார்வையிட்டு தங்களது சமூக வலை...
சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்

கல்வி, செய்திகள்
சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர் சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும் சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர்.   2017-ம் ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ராம்கி ஐஏஎஸ் அகாடமி, மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அண்ணாநகரில் 13-வது பிரதான சாலையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. நிபுணர்களின் சிறப்பு பயிற்சி மற்றும் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் ஆகியவை இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை இது ந...
விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

சினிமா
உலகளவில் வெற்றியைப் பெற்றிருக்கும் அசலான தமிழ் தொடர் 'சுழல் தி வோர்டெக்ஸ்' ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸைப் பார்வையிட்ட பார்வையாளர்களும், ரசிகர்களும், இணையவாசிகளும், விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள். நீண்ட வடிவிலான முதல் தமிழ் வலைத்தள தொடருக்கு உலகளாவிய அளவில் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர், ஜூன் 17ஆம் தேதியன்று வெளியானது. ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’, புஷ்கர் & காயத்ரி இணைகளின் திரை படைப்புகளில் ஆக சிறந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை. புலனாய்வு விசாரணை பாணியிலான இந்த திகில் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட தொடராகும். இது முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. மாயாஜாலம் நிகழ...
 அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.

 அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.

சினிமா
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைந்துள்ள நீர் நிலையில் திரையிடப்பட்டது. இதனை அங்குள்ள பார்வையாளர்கள் கண்டுகளித்து உற்சாகமாக கொண்டாடினர். இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கதிர், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் .எம் இயக்கத்தில் தயாரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், தற்போது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல், பிரஞ்சு ( பெர்ஸியன்)...
தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களின் புதிய முயற்சி

தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களின் புதிய முயற்சி

சினிமா
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (NFDC) எனும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். என் எஃப் டி கிரியேட்டர் எகானமி (NFT Creator Economy) சார்பாக இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை ஆரக்கள் மூவிஸ் மேற்கொள்ளும். என் எஃப் டி கிரியேட்டர் எகானமி என்பது ஆரக்கிள் மூவீஸின் தாய் நிறுவனமாகும். ஆரக்கள் மூவிஸ் இந்தியாவின் முதல் என் எஃப் டி திரைப்பட சந்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படும். அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக NFDCயிடம் கொடுக்கப்படும். இந்த...
 ஜெயிக்கப்போவது ஜல்லிக்கட்டு காளையா ? பந்தயக்குதிரையா ? ; பிரமிப்பூட்டும் காரி ட்ரெய்லர்

 ஜெயிக்கப்போவது ஜல்லிக்கட்டு காளையா ? பந்தயக்குதிரையா ? ; பிரமிப்பூட்டும் காரி ட்ரெய்லர்

சினிமா
காரி ட்ரெய்லர்- இருபது மணி நேரத்தில் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்கள் தொழில்நுட்பம் வளரவளர இன்னும் பத்திருபது வருடம் கழித்து என்னவெல்லாம் நடக்கும் என அதீத கற்பனை கொண்ட படங்கள் ஒரு பக்கம் வெளியாகி வருகின்றன. ஆனாலும் மண்மணம் மாறாத கிராமத்து எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களது கொண்டாட்டங்களையும் வீரத்தையும் சொல்லும்விதமாக படங்களை இயக்குவதற்கும் நடிப்பதற்கும் தமிழ் சினிமாவின் வெகுசிலரே இருக்கின்றனர். அந்தவகையில் கிராமத்து மக்களின் பிரதிபலிப்பாக நம் கண்முன்னே பளிச்சிடும் நடிகர்களில் சசிகுமாருக்கு முக்கிய இடம் உண்டு.. ஈரமும் வீரமும் கலந்த கதாபாத்திரங்கள் என்றால் சசிகுமாருக்கு அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி. அந்த வகையில் தற்போது சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் "காரி". "காரி" என்பது ஐயனார் மற்றும் கருப்பசாமியின் பெயரில் ஒன்று. வீரம் தெறிக்கும் காவல் தெய்வத்தி...
 *கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2”பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!*

 *கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2”பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!*

சினிமா
மெகா தயாரிப்பாளரான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் 'ஜென்டில்மேன்2 ' . ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர். மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ''ஜெண்டில்மேன்' படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்,கே.டி.குஞ்சுமோன். அதே போல் இப்போது, 'ஜென்டில்மேன்2 ' டைரக்டராக 'ஆஹா கல்யாணம்' புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா பெயரை அறிவித்ததும் டிரண்டிங் ஆனது. படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும் அனுபவமிக்க பிரபலங்களாக இருக்கும் என்றும் கூறியிருந்தார், தயாரிப்பாளர் *கே.டி.குஞ்சுமோன். இப்போது அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.'ஜென்டில்மேன்' படத்தில் புது இயக்குனருக்கு உற...
‘மாமனிதன்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

‘மாமனிதன்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சினிமா
யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது.. வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படத்தை தய...
திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

சினிமா
ராணா டகுபதி, ஹன்சிகா மோத்வானி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் வியந்து பாராட்டிய 'சுழல் தி வோர்டெக்ஸ்' ஜுன் 17 ஆம் தேதி வெளியான அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் வலைதளத் தொடரினை தென்னக நட்சத்திரமான ராணா டகுபதி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் கண்டு ரசித்து தங்களது விமர்சனத்தையும் எண்ணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான சுட்டுரைகளாக எழுதி ரசிகர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், '' சுழல் தி வோர்டெக்ஸ்= குழுவினருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய அன்பான தோழி ஸ்ரேயா ரெட்டி அவர்களை திரையில் பார்க்கிறேன். அவருக்கும், சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை உருவாக்கிய புஷ்க...