நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 45 வருட திரைத்துறை பயண வெற்றிக்கொண்டாட்டம் !!!
தமிழ் திரையுலகின் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும், தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகருமான மோகன் திரைத்துறையில் 45 வருடங்களை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் நேற்று அவரது பிறந்த நாளில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர்.
இவ்விழாவில் நடிகர் மோகன் நடிக்கும் ஹரா படத்திலிருந்து முதல் சிங்கிளாக ஒரு அருமையான பாடல் வெளியிடப்பட்டது. ஹரா படக்குழுவினருடன் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும் தமிழகமெங்குமிருந்து பிரமாண்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில்…
இயக்குநர் விஜய் ஶ்ரீஜி பேசியதாவது...
மோகன் சார் அப்போது மட்டுமல்ல இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். அவரிடம் கதை சொல்ல எனக்கு 2 வருடங்கள் ஆனது. நிறைய கதைகள் கேட்டாலும் நல்ல படம் என்றால் தான் அவர் ஒப்புக்கொள்கிறார். இன்றும் ஷூட்டிங் செல்லும் இடங்களில் அவருக்காக ரசிகர்கள...









