Tuesday, January 21

’’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”-பிரபாஸ்

’ஆதி புருஷ்’ டீஸர் குறித்து கமெண்ட் அடித்த பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முதலில் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார்.

பல ஹீரோக்கள் தங்கள் படம் குறித்த தகவல்கள் குறித்து சஸ்பென்ஸ் காக்கும்போது, ‘அடுத்தடுத்த அப்டேட்களுக்கு நான் கியாரண்டி’ என்று பிரபாஸ் முன்வந்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

Spread the love