அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார்
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், 'காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும்...









