கேரளாவின் பாரம்பரிய சுவை இனி சென்னையிலும்… ‘Dhe Puttu’ கிளையை தொடங்கிய திலீப் – காவ்யா மாதவன்!
*சென்னையில் ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிகள்*
*சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு - DHE PUTTU’ எனும் பெயரில் புதிய கேரள கலாச்சார பாணியிலான உணவகத்தை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.*
உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் - காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வ...








