மணமகன் அல்லது மணமகளின் விருப்பத்திற்கு மாறாக நடக்க உள்ள திருமணங்களை நிறுத்த வித்தியாசமான ஒரு நிறுவனத்தின் மூலமாக உதவுகிறது யோகிபாபு, மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் குரூப் இந்த நிலையில் சிரிஷ் மிருதுளாவை காதலிக்கிறார் திருமணங்களை நிறுத்தும் வேலையை விட்டுவிட சொல்லி மிருதுளா கேட்டும் சிரிஷ் மறுத்துவிடுகிறார்,இந்த நிலையில் சிரிஷ் -க்கு 6 மாதத்திற்குள் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுவே விரைவாக அவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டி, பெண்பார்க்கும் ஏற்பாடுகள் வேகமாக நடைபெறுகிறது,மணமகளின் பெயரோ படமோ இல்லாமல் அழைப்பிதழ்களை அச்சிடப்படுகிறது , சிரிஷின் திருமணம் நடக்கவே கூடாது என ஒரு குழு தடுக்க நினைக்கிறது இறுதியில் சிரிஷ் காதலித்த பெண்ணை மணம் செய்தாரா ? அல்லது வேறு யாரை மணந்து கொண்டார் ? என்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு எதிர்பாராத கிளைமாக்ஸ் ட்விஸ்டுடன் கதை முடிகிறது.
படத்தின் நாயகன் சிரிஷ் 2016ம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தின் வாயிலாக ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர் அழகாக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் ஹீரோ சிரிஷ் இயல்பாக நடித்துள்ளார் அவருடன் யோகி பாபு, சதீஸ், சிரிஷ் அப்பாவாக ஞானசம்பந்தன் தாத்தாவாக சாமிநாதன் அருந்ததி நாயர், நமோ நாராயணன் செந்தில் என் பலரும் இந்த படத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி உள்ளனர் ஹீரோ சிரிஷ் உடன் இணையாக முழு பட திலும் வரும் கதாபாத்திரத்தில் சதீஷின் நடிப்பும் அவர்களின் பாஸாக உள்ள மார்க்பாபுவான யோகி பாபுவின் காமெடி கவுண்டர்களும் ரசிக்கும்படி உள்ளது
இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த நகைச்சுவை திரைப்படத்திற்க்கு தரன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இவருக்கு 25-வது திரைப்படமாகும்.
எதிர்பாராத, வித்தியாசமான கிளைமாக்ஸ் கொண்ட இந்த படம், லாஜிக் தேடாமல் ஜாலியா TIME PASSக்கு படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாய் ருசிக்கும் பிஸ்தாதான்.