Wednesday, October 9

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர்

இணையத்தில் வைரலாகி வரும் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர்

ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர். இப்படத்தில் “பிக்பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குனர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் சென் ஆகியோர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்

ஐஸ்வர்யா தத்தா, ஏ.வெங்கடேஷ், சரண் விசாகன், டிஎஸ்கே, பரத், யோகி ராம், ஸ்வாதி, இளங்கோசுரேஷ், ராய்

இயக்குனர் – A.நாகேந்திரன்

தயாரிப்பாளர் – எஸ்.சூர்யாதேவி

தயாரிப்பு நிறுவனம் – சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட்

ஒளிப்பதிவு – கார்த்திகேயன்

இசை – தினேஷ் ஆண்டனி

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை இயக்கம் – வீரமணி கணேசன்

நடனம் – அஜய்

உடைகள் – தமிழ்

ஒப்பனை – வினோத் சுகுமாரன்

பிஆர்ஓ – ஷேக்

Spread the love