Sunday, April 26

Author: admin

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலக்கியம், சினிமா
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனைவருக்கும் அன்பான வணக்கம் எழுதுவது சீனு ராமசாமி எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த ...
இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்.

இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்.

சினிமா
தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்.   மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் திரு.சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் திரு.சீனு ராமசாமி இயக்கத்த...
இயக்குனர் தம்பி செய்து இப்ராஹிம் @ ஸ்ரீ நாயகனாக நடிக்கும் ” ரிலாக்ஸ் “

இயக்குனர் தம்பி செய்து இப்ராஹிம் @ ஸ்ரீ நாயகனாக நடிக்கும் ” ரிலாக்ஸ் “

சினிமா
முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை " ரிலாக்ஸ் "இயக்குனர் தம்பி செய்து இப்ராஹிம் @ ஸ்ரீ நாயகனாக நடிக்கிறார் ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணியாற்றிய டேவி சுரேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுத...
மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’

சினிமா
மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'- சவுதி அரேபியாவில் வெளியாகிறது. ‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு 'நடனப்புயல்' பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது. பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பா...
 இயக்குநர் லெனினிடம் பாராட்டு பெற்ற ‘ஒருநாள்’ குறும்படம்

 இயக்குநர் லெனினிடம் பாராட்டு பெற்ற ‘ஒருநாள்’ குறும்படம்

சினிமா
இயக்குநர் அருண் எழுதி இயக்கியுள்ள குறும்படம் ‘ஒருநாள்’. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கமும் பெங்களூர் இன்னோவேடிவ் பிலிம் இன்டர்நேஷனலும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில் இந்த குறும்படம் கலந்து கொண்டது.இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் சிறந்த 25 படங்களில் ஒன்றாக இந்த ‘ஒரு நாள்’ குறும்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த திரைப்படக் கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களும் தங்களது கைத்தட்டல்கள் மூலம் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.இந்த குறும்படத்தில் லயோலா கல்லூரி மாணவரான யஸ்வந்த் மற்றும் நடனக் கலைஞர் தீபிகா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவர்களது நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது . இந்த குறும்படத்திற்கு பெருமாள் மற்றும் அம்மு முத்து இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அர்ஜுன்...
 பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு

 பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு

சினிமா
 'பிக் பி' அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, 'புராஜெக்ட் கே' படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார். நேற்று அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் 'புராஜெக்ட் கே' படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளிய...
தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படம்

தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படம்

சினிமா
தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற "சாட் பூட் த்ரி" தமிழ் திரைப்படம் பற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் செய்தி குறிப்பு திரு. அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள "சாட் பூட் த்ரி" தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) வழங்கப்பட்டது. சாட் பூட் த்ரி திரைப்படத்தின் ஒளிப்பதிவு சுதர்சன் ஸ்ரீநிவாசன், கலை ஆருச்சாமி தொகுப்பாளர் பரத் விக்ரமன் இசை பிரபல வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா திரைக்கதை ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன். விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரு...
மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து  வெளியிட்டுள்ளனர்!

மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து  வெளியிட்டுள்ளனர்!

சினிமா
ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடிக்க உள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் . படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும்  ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நட...
” யுவனுக்கு,  பிளாக்‌ஷிப் மற்றும் SNS  மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ் “

” யுவனுக்கு,  பிளாக்‌ஷிப் மற்றும் SNS  மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ் “

சினிமா
தொடர்ந்து இணையத்தில் பல சாதனைகளை படைத்து விரைவில் சாட்டிலைட் தொலைக்காட்சியாக மாற‌விருக்கும் பிளாக்‌ஷிப் நிறுவனமும் , கல்வி உலகில் கனவுப்புதுமைகளை அரங்கேற்றி 25வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் SNS நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின்  வெள்ளி விழா பரிசாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் ... விரைவில் பிளாக்‌ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் "லவ் யூ யுவன்" எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது .. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை பார்க்க மட்டுமே அழைக்கப்பட்ட யுவனுக்கு , அவருக்காக காத்திருக்கும் இந்த உலக சாதனை முயற்சியே சொல்லப்படவில்லை என்பது அவருக்கு கூடுதல் ஆச்சர்யம், மகிழ்ச்சியைத் தரவே , ஆடிப் பாடி அதிரடித்தார் இசை இளவரசர் யுவன் சங்கர் ராஜா ...இதன்படி ஒரே நேரத்தில் 11,000 மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிப் பாடி சாதனை படை...
’ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியிடப்பட்டது!

’ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியிடப்பட்டது!

சினிமா
ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு இது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஹா முன்பே சொன்னது போல, 100% தமிழ் கண்டெண்ட் என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதற்கான உண்மையான ஒரு நிகழ்வு தான் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டோடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது. ஜ...