அருண் பிரசாத் இயக்கத்தில் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படம் .
நேர்மையான போலீஸ் அதிகாரியா இருக்கிற ஆனந்த் நாக் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நெய்வேலிக்கு வருகிறார், அவர் சேர்ந்த இரண்டு நாளில் நடுநோட்டில் ஒருத்தர் இறந்து கிடைக்க அது விபத்தா,இல்ல இது வேற ஏதாவது காரணமா? என விசாரணையை ஆரம்பிக்கிறார், உடனே அடுத்து ஒரு கொலை நடக்கிறது. இந்த ரெண்டு மர்ம மரணங்களும் ஒரே இடத்தில் நடக்கிறதுனால காரணம் என்னன்னு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்றாரு. ரெண்டு விதமான சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ? இரண்டு மரணங்களையும் செய்தது ஒருவரா ?அல்லது வேறு வேறு நபரா ?என விசாரணையை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுட்டு போறாரு. ஆனந்த் நாக் பல முயற்சிகளை செஞ்சாலும் எந்த ஒரு தடயமும் கிடைக்காததுனால என்ன பண்றதுன்னு தெரியாம இருக்காரு.குற்றவியல் நிருபரான ஜனனி உதவியோடு தன்னுடைய விசாரணையை தொடரும் ஆனந்த் நாக் சந்தேகத்தின் பேர்ல விலைமாது ஒருவரை ஸ்டேஷனுக்கு வர வச்சு விசாரணை செய்ற நேரத்துல யாரும் எதிர்பாராத விதமா ஸ்டேஷனில் அவங்க கொலை செய்யப்படறாங்க ,எல்லா கொலைகளுக்கும் ஒரு விதமான தொடர்பு இருக்கிறதுனால வேற ஏதாவது எங்கேயாவது இது மாதிரியான கொலைகள் நிகழ்ந்திருக்கான்னு தேடுறாரு, அதன் பின் என்ன நடந்தது?குற்றவாளிகளை ஆனந்த்நாக் கண்டுபிடிச்சாரா? இல்லையா?என்பதுதான் படத்தின் மீதி கதை .
போலீஸ் இன்ஸ்பெக்டர் நடிச்சிருக்கிற ஆனந்த் நாக்கின் தோற்றமும் ,நடிப்பும் , உடல் மொழியும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துருக்கு .விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு தன் நடிப்பின் மூலமாக பலம் சேர்த்துள்ளார் ஆனந்த் நாக்.
வினிஷா என்னும் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள ஜனனிகுணசீன் மற்றும் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி என இதர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் குறைவில்லாத வெளிப்படுத்தியுள்ளார்கள் .
ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் பங்களிப்பும், இசையமைப்பாளர் கார்த்திக்.ERA -ன் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பக்க பலமாய் அமைந்துள்ளது .கலை இயக்குனர் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் மனோ,படத்தொகுப்பாளர் சத்தியமூர்த்தி ஆர் போன்ற தொழில்நுட்பாளர்களின் பங்களிப்பும் ஒட்டுமொத்த படத்திற்கும் பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது.
விறுவிறுப்பான திரைக்கதை திருப்புங்களுடன் அமைந்த சிறப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படத்தை இயக்குனர் S .அருண் பிரசாத் சிறப்பான முறையில் இயக்கியுள்ளார்.
மொத்தத்தில் அறிவான் அனைத்து ரசிகர்களையும் கவர்வான்.
