Saturday, June 27

‘கான் சிட்டி’ – திரை விமர்சனம்

பணம் சம்பாதிக்க நினைத்து மோசடி செய்பவர்கள், அந்த மோசடியிலேயே சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை, அதிலிருந்து தப்பிக்க மீண்டும் ஒரு பெரிய மோசடி, இப்படியாக பேராசையும் ஏமாற்றமும் மாறி மாறி விளையாடும் கதையை பிளாக் காமெடி பாணியில் சொல்லும் முயற்சியே ‘கான் சிட்டி’.


பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அர்ஜுன் தாஸ், அன்ன பென், வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு, சூழ்நிலையின் கட்டாயத்தில் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள்.ஆரம்பத்தில் அவர்களின் திட்டம் வெற்றி பெற்றாலும் , மேலும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு செய்த அடுத்த முயற்சியில் தங்களது பணத்துடன், பலரது பணத்தையும் இழக்கிறார்கள். போலீசிடம் இருந்து தப்பிக்கும் அவர்கள், ஒன்றாக இணைந்து தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்குகிறார்கள்.அப்போது அவர்களை கண்டுபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, அவர்களையே பயன்படுத்தி மிகப்பெரிய மோசடியை நடத்த திட்டமிடுகிறார். மீண்டும் சென்னைக்கு திரும்பும் அந்த குழு, வாழ்க்கையை மாற்றும் கடைசி ஆட்டத்தில் களமிறங்குகிறது.அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? அதன் பின் நடந்தவைகள் என்ன என்பதே ‘கான் சிட்டி’ படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக சரவணா என்னும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார் தான் நடிக்கக்கூடிய படங்களில் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்ளும் நடிகர் அர்ஜுன் தாஸ், இந்த படத்திலும் தான் ஏற்று இருக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு உரிய பங்களிப்பை சிறப்பாக தன் நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார்.

.மேலும் மித்ரா என்னும் கதாபாத்திரத்தில் அன்னா பென்னின் இயல்பான நடிப்பும் ,யோகி பாபுவின் அம்மாவாக ஜானகி என்னும் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய வடிவுக்கரசியின் அனுபவ நடிப்பும், அதனுடன் ஜாக்கி என்னும் கதாபாத்திரத்தில் யோகி பாபுவின் நடிப்பும் ரசிக்கும் வகையில் அமைந்து இருந்தது. மேலும் அகிலன்,வி டிவி கணேஷ் ,ராதாரவி நந்தகோபால்,ரமேஷ் திலக்,பொன்வண்ணன் போன்றவர்களும் ஏனைய கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக கொடுத்திருந்தார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் கதையமைப்புக்கு ஏற்ற காட்சிகளுக்கு ,இணக்கமாக நேர்த்தியான ஒளி அமைப்பினை அமைத்துக் கொடுத்துள்ளார். ஷான் ரோல்டனின் இசையில் ஒலிக்கும் பாடல்கள்,ரசித்து கேட்பதற்கு ஏற்றவையாக உள்ளன. படத்தின் காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை தரும் வகையில் அவரது பின்னணி இசையும் நன்கு அமையப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் .ஏமாற்றவும் கூடாது,ஏமாறவும் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி நகைச்சுவையுடன் காட்சிகளை நடத்திச் சென்று, தொய்வில்லாத திரைக்கதை உடன் படமாக்கி உள்ளார் இயக்குநர் ஹரிஸ் துரைராஜ்.

மொத்தத்தில் கான்சிட்டி அல்லது ஒரு டைம் பாஸ் பொழுதுபோக்கு திரைப்படம்.

Spread the love