‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு
நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக உங்களால் ‘மேகம்’ பாடலை மிஸ் செய்ய முடியாது. நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம்பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த் வசந்தா பாடி இசையமைத்துள்ளார், வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார்.
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘மேகம்’ பாடல் குறித்தும், கோவிந்த் வசந்தா குறித்தும் பேசும் இயக்குநர் பிருந்தா மாஸ்டர், “தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் முன்னணி பாடகராகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் அவரை அறிந்திருந்தோம். மேடையில் அவர் பலமுறை வழங்கிய தாய்க்குடம் ...









