உழவன் ஃபவுண்டேஷனின் “உழவர் விருதுகள் – 2022”
உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே உழவன் ஃபவுண்டேஷன்.
உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது.
பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறது.
நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது.மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் ப...









