கிளாப் திரைப்பட விமர்சனம்
கிளாப் திரைப்பட விமர்சனம்
ஒவ்வொருத்தோரோட வாழ்க்கையிலும் ஏதாவது இலட்சியம், அதை நோக்கிய இலக்கு கண்டிப்பாக இருக்கனும் ,ஒருவேளை தான் கொண்ட இலட்சியஇலக்கை தான் அடையாமுடியாவிட்டாலும் இன்னொரு திறமைசாலியை ஊக்குவித்து அதில் சாதனை படைக்கலாம் எனும் கருத்தை கொண்டு, விளையாட்டை அடிப்படையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் கதை.
இளம்வயதிலிருந்தே தடகள வீரரானாக தேசிய அளவில் வெற்றி பெற்று சாம்பியன் ஆக சாதனை படைக்கவேண்டும் என்ற இலட்சிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறார் கதையின் நாயகன் கதிர் . அவருக்கு உறுதுணையாக அவரது தந்தையான ராஜ் மகனுடைய லட்சியத்துக்காவே வாழ்ந்து வருகிறார்.
ஒரு விபத்தின் காரணமாக தந்தையை இழக்கும் கதிர் தனது கால் ஒன்றையும் இழக்கிறார், இனி தன் லட்சியத்தை அடையவே முடியாது என்று தவிக்கும் கதிருக்கு துணையாக வந்து உதவுகிறார் அவரது காதலியான மித்ரா .கதிருக்கு வேலையும் கிடைக்கி...









