Tuesday, December 3

பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

“பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.

இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.மேலும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவரும்.

 

Spread the love