கிளாப் திரைப்பட விமர்சனம்
ஒவ்வொருத்தோரோட வாழ்க்கையிலும் ஏதாவது இலட்சியம், அதை நோக்கிய இலக்கு கண்டிப்பாக இருக்கனும் ,ஒருவேளை தான் கொண்ட இலட்சியஇலக்கை தான் அடையாமுடியாவிட்டாலும் இன்னொரு திறமைசாலியை ஊக்குவித்து அதில் சாதனை படைக்கலாம் எனும் கருத்தை கொண்டு, விளையாட்டை அடிப்படையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் கதை.
இளம்வயதிலிருந்தே தடகள வீரரானாக தேசிய அளவில் வெற்றி பெற்று சாம்பியன் ஆக சாதனை படைக்கவேண்டும் என்ற இலட்சிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறார் கதையின் நாயகன் கதிர் . அவருக்கு உறுதுணையாக அவரது தந்தையான ராஜ் மகனுடைய லட்சியத்துக்காவே வாழ்ந்து வருகிறார்.
ஒரு விபத்தின் காரணமாக தந்தையை இழக்கும் கதிர் தனது கால் ஒன்றையும் இழக்கிறார், இனி தன் லட்சியத்தை அடையவே முடியாது என்று தவிக்கும் கதிருக்கு துணையாக வந்து உதவுகிறார் அவரது காதலியான மித்ரா .கதிருக்கு வேலையும் கிடைக்கிறது ,தான் சாதிக்க முடியாத ,அடைய முடியாத இலக்கை திறமையான ஆனால் ஆதரவற்ற இளம்பெண் பாக்கியலட்சுமியை கொண்டு கதிர் அடைய நினைப்பதே மீதிக்கதை
இந்த படத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி சிறப்பாக நடித்துள்ளார் ஒரு காலை இழந்தவராக கொண்ட இலக்கை சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு கொணடாவராய் யதார்த்தமான நடிப்பை நிறுவி வெளிப்படுத்தியுள்ளார்
மித்ராவாக நடித்திருக்கும் அகன்ஷா சிங் தன் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் கூட சிறப்பாக
மிளிர்கிறார் எந்த சூழ்நிலையிலும் காதலை இழக்காது காதலனுக்கு உற்ற துணையாய் தோள் கொடுக்கும் நடிப்பில் நிறைவாய் நடித்துள்ளர்
பாக்கியலட்சுமியாக நடித்துள்ள க்ரிஷா குரூப். அவரது கதாபாத்திரத்துக்கு ஏற்ற முகபாவமும் கொண்டு திறம்பட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .ஆதியின் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் குறைவான நேரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார் .பொறுப்புள்ள தியாக மனப்பான்மை கொண்ட தந்தை கதாபாத்திரத்தில் மனதில் இடம்பிடிக்கிறார்.
வெங்கட்ராமன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நாசரும் தன் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார். நிறைய படங்கள் விளையாட்டை அடிப்படையாக கொண்டு தமிழில் வந்திருந்தாலும் மாறுபட்ட திரைக்கதையுடன், உணர்ப்பூரவமான படமாக இயக்குனர் பிரித்திவி ஆதித்யா இயக்கியுள்ளார்
இந்தப் படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா,அவரது பிண்ணனி இசையும் பாடல்களும் இனிமை.
இயக்குனரின் முயற்சிக்கு உற்ற துணையாய் ,பக்கபலமாய் கரம் கொடுத்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் பிரவீண்குமாரும், படத்தொகுப்பாளர் ராகுலும். இவர்களது பங்களிப்பு படத்தின் அழகியலுக்கும், கோர்வையான காட்சி அமைப்பிற்க்கும் பெரிதும் வழிவகுத்துள்ளன.
மொத்தத்தில் கிளாப் நிச்சயம் ரசிகர்களிடம் கிளாப் கண்டிப்பாய் வாங்கும் .