*”தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*
*"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*
சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி.
இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான ...









