Monday, May 25

Author: admin

*கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்*

*கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்*

சினிமா
*பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள 'காட்டாளன்' வனத்தில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை விறுவிறுப்புடன் விவரிக்கிறது* 2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மார்கோ' திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான 'காட்டாளன்' உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார். பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. "பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்ப...
*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது*

*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது*

ஆன்மீகம்
*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது* இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும். பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும...
*கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*

*கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*

சினிமா
*கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!* திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது. இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவ...
*ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது…*

*ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது…*

சினிமா
*ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது...* மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ...
*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*

*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*

சினிமா
*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!* இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக  உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறி...

’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

சினிமா
’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க...
*”அதிரடி” தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்*

*”அதிரடி” தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்*

சினிமா
*டொவினோ தாமஸ், பசில் ஜோசப் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிரடி படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்தில்* இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி." பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, "இரண்ட...
ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…   

ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்…   

சினிமா
ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்... ‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரு.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்டமான தொடக்க...
கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!*

கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!*

சினிமா
*உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!* கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்து...
*அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்….*

*அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்….*

சினிமா
*அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்....* தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும்...