’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’- திரை விமர்சனம்
தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில், சீதாராம் பென்சி கேஸ் நம்பர் 18 மற்றும் கேஸ் ஆஃப் கொண்டனா என்னும் பட பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள படம் ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’.
உடுப்பி பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் கதையின் நாயகன் விஜய் ராகவேந்திரா,அந்தப் பகுதியில் பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள், கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த கொலைகளை செய்திருப்பது ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது .மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் குறிப்பிட்ட வயதினைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் .இந்தக் கொலைகளை செய்பவர் யார் ? எதற்காக இந்த கொலைகள் செய்யப்படுகின்றன ?இதன் பின்னணி என்ன? இவைகளை கண்டறிய கதையின் நாயகன், காவல்துறை அதிகாரி விஜயராகவேந்திரா களமிறங்குகிறார். அவரால் கொலையாளியை பிடிக்க முடிந்ததா ?அதன் பின் நட...









