கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜியின் புதுமையான பரிமாணத்தில் வல்லமை.
கிராமப் பகுதியில் விவசாய பணியில் இருக்கிற பிரேம்ஜி தன்னுடைய மனைவியை இழந்ததற்கு பிறகு தன்னோட மகளான திவ்யதர்ஷினிய அழைச்சுக்கிட்டு சென்னைக்கு வராரு ,சென்னையில ஒரு வீடு எடுத்து தங்கற அவருக்கு, போஸ்டர் ஒட்டுற வேலை கிடைக்குது, இந்த சமயத்துல ஒரு நாள் தன் பொண்ணுக்கு உடம்பு சரியில்லை அப்படிங்கிறதுக்காக ஒரு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறாரு, அப்பதான் தன்னோட மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கா அப்படிங்கிற விஷயம் பிரேம்ஜிக்கு தெரிய வருது, மகளுக்கு இப்படிப்பட்ட ஒரு அநீதியை செஞ்சது யாரு ,அவன தேடி கண்டுபிடிச்சு பழி தீர்க்கணும் அப்படின்னு அப்பாவும் மகளும் தீர்மானிக்கிறாங்க ,கடைசில அவங்க நினைச்ச படி நடந்ததா இல்லையா அப்படிங்கறதுதான் படத்தோட மீதி கதை ..
பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில , துணைக் கதாபாத்திரங்களில நடிச்சு வந்த பிரேம்ஜி இந்த படத்துல முழுக்க முழுக்க கதையின் நாயகனா, இளம்பெண்ணுடைய தகப்பனா ,வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரொம்ப நல்லா நடிச்சு இருக்காரு, இந்தப் படம் அவருடைய ஆக்டிங் கேரியர்ல ஒரு முக்கியமான படமா அமைஞ்சிருக்குன்னு சொல்லலாம், அதே மாதிரி அவரோட பொண்ணா நடிச்சிருக்க சிறுமி திவ்யதர்ஷினி அழகா கேரக்டர உள்வாங்கி ,ரொம்ப யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க, மேலும் இந்த படத்துல முத்துராமன், சூப்பர் ஹிட் சுப்பிரமணி, தீபா ஷங்கர், விது, ரஜித்ன்னு எல்லாருமே அவங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களில நிறைவா நடிச்சிருக்காங்க .
எளிய மக்களின் வாழ்வியல் சம்பவங்கள பிரதிபலிக்கும் கதைக்கு ஏத்த வகையில காட்சிகளுக்கு ஒளி வடிவம் கொடுத்திருக்காரு ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி ,அதேபோல கேரக்டர்களின் மன உணர்வுகளை சித்தரிக்கிற வகையில காட்சிகளுக்கு பொருத்தமா பின்னணி இசைய இசையமைப்பாளர் ஜி கே வி கொடுத்திருக்காரு, முன்னெல்லாம் எங்கோ ஓரிடத்தில் நடந்து கிட்டு இருந்த பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுகள் இப்ப தினசரி நிறைய இடங்களில, நிறைய சூழ்நிலைகளில நடக்கிற செய்திகளை நாம செய்திகளில பார்க்கிறோம் ,இது மாதிரியான சந்தர்ப்பங்கள், யாருக்கோ, எங்கோ நடக்குது அப்படின்னு கடந்து போயிடாம, சமூக விழிப்புணர்வு எல்லாருக்கும் இருக்கணும் அப்படிங்கற விழிப்புணர்வை ஏற்படுத்தற வகையில இந்த படத்தை கருப்பையா முருகன் இயக்கி இருக்காரு.
வல்லமை – அனைவரும் பார்க்கவேண்டிய பதிவு. .
