Tuesday, April 21

கேங்கர்ஸ்- திரை விமர்சனம்

மீண்டும் சுந்தர்.சி – வடிவேலுவின் கூட்டணியில் கேங்கர்ஸ்

அரசன் கோட்டைங்குற ஊரில் இருக்கிற அரசு பள்ளியில் படிக்கிற மாணவி ஒருத்தவங்க திடீர்னு காணாம போயிடுறாங்க, அந்த பள்ளிக்கூடத்திலேயே ஆசிரியையாய் இருக்கிற சுஜி அவர தேடித் தரச் சொல்லி முதலமைச்சரோட தனி பிரிவிற்கு புகார் கொடுக்குறாங்க, அது மட்டும் இல்லாம அதே ஊர்ல பல சமூக விரோத செயல்கள் ,கள்ளச்சாராயம் போன்றவற்றை செஞ்சிட்டு இருக்க மலையரசன் மற்றும் அவரோட தம்பி கோட்டை அரசன் பற்றியும் புகார் கொடுக்குறாங்க, இந்த புகார்கள் எல்லாம் விசாரிச்சு நடவடிக்கை எடுக்குறதுக்காக அந்த பள்ளிக்கு ஆசிரியரா ஒரு அண்டர்கவர் அதிகாரியை நியமிக்குது காவல்துறை ,அதே ஸ்கூலுக்கு புதுசா ஒரு பி.ஈ டி மாஸ்டரா ஒருத்தர் வராரு அவரோட பேரு சரவணன் (சுந்தர். சி ). அதே ஸ்கூல்ல பி.ஈ. டி மாஸ்டர் சிங்காரமும் (வடிவேலு) பணிபுரியிராரு, அந்த ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட அண்டர்கவர் போலீஸ் யாரு ? காணாமல் போன மாணவி என்ன ஆனாங்க? இது போன்ற நிகழ்வுகளை நோக்கி முன்னேறறுதான்  கேங்கர்ஸ் படத்தோட மிச்ச கதை.

கதையின் நாயகனாக சுந்தர் சி வழக்கமான தன் பாணியில் கதாபாத்திரத்திற்கு ஏத்த அளவுக்கு இயல்பாக நடிச்சுஇருக்காரு , அதேபோல சின்ன இடைவெளிக்கு பிறகு படம் முழுக்க நகைச்சுவை கேரக்ட்டர்ல வராரு வைகைப்புயல் வடிவேலு, இந்த படத்தின் மூலமா மறுபடியும் தன்னோட ரசிகர்களை பெரிய அளவில கவர்ந்திருக்கிறாரு அப்படின்னு சொல்லலாம், மற்றும் கேதரின் தெரசா, வாணி போஜன் முனிஷ்காந்த், பகவதி பெருமாள், சந்தான பாரதி, அருள்தாஸ் ,மைம் கோபி என மீதி கேரக்ட்டர்ல
நடிச்சவங்க எல்லாருமே கேரக்ட்டருக்கு  ஏத்த வகையில நல்லா நடிச்சுஇருக்காங்க, படத்தோட காட்சிகளுக்கு ஏத்த வகையில சரியானதொரு பின்புலத்தை . கிருஷ்ணசாமியோட ஒளிப்பதிவு அமைச்சு கொடுத்து இருக்கு , சத்யா சி-யின் இசையில பாடல்கள் பெரிதாக மனசுல இடம் பிடிக்கலேன்னாலும் பின்னணி இசை நல்லா இருக்கு .

ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், ரசிகர்கள் என்ன மாதிரியான விஷயங்களை தன்னோட படங்களில எதிர்பார்ப்பாங்க அப்படின்னு அவங்களோட பல்சை பார்த்து படம் எடுக்கறதுல சுந்தர். சி ,தனக்கென ஒரு பாணியை கடைபிடிச்சுகிட்டு வருபவரு, அந்த வரிசையில இந்த படத்திலும் ரசிகர்களுக்கு ஏத்த விஷயங்கள சரியான விகிதத்தில கொடுத்திருக்கிறாரு. சுந்தர் சி.

மொத்தத்தில் கேங்கர்ஸ்.-ஜாலியான டைம் பாஸ்.

Spread the love