Wednesday, May 21

டென் ஹவர்ஸ்- திரை விமர்சனம்

தங்களோட பொண்ண காணோம் அப்படின்னு அம்மாவும் தாத்தாவும் புகார் கொடுக்குறாங்க, காணாம போன அந்த பொண்ணை தேடி போறாரு இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ ,அதே சமயத்துல ஒரு டிராவல்ஸ் பஸ்ல ஒரு பொண்ண பாலியல் துன்புறுத்தல் செய்யுறதா கட்டுப்பாட்டு அறிக்கை ஒரு தகவல் வருது ,அந்த பஸ்ஸ மடக்கி காஸ்ட்ரோ பிடிக்கிறப்ப, அதுல ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாரு ,இந்த கொலைக்கான பின்னணி என்ன, கொலையை செஞ்சது யாரு ,கடைசியில என்ன நடந்தது அப்படிங்கற மரமுடிச்சுகள் அவிழ்க்கப்படுறதுதான் படத்தோட மீதி கதை.

 

படத்துல கதையின் நாயகனாக காஸ்ட்ரோ என்கிற கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிச்சிருக்காரு ,இவர் ஏற்கனவே பல படங்களில் காவல்துறை அதிகாரியை நடித்திருந்தாலும் இந்த படத்துல அவர் தனிப்பட்ட முத்திரையோடு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பா நடிச்சிருக்காரு..

ஜீவா ரவி மற்றும் முருகதாஸ், சரவணா சுப்பையா எல்லாருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிச்சிருக்காங்க,ஒரே இரவில் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடக்கிற பல சம்பவங்களை ஒரு முழு நீள சஸ்பென்ஸ் திரில்லர் படமா உருவாக்கி இருக்கார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.

சஸ்பென்ஸ் திரில்லர் படக்கதைகளுக்கு ஏற்ற காட்சி அமைப்புகளை அமைப்பதில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை போன்றவைகளுக்கு முக்கியமான இடம் உண்டு, அந்த வகையில் முழுவதும் இரவில் நடக்கும் கதையின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பான கேமரா கோணங்களையும், ஒளி அமைப்புகளையும் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் திறம்பட அமைத்து உள்ளார் .படத்தின் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பக்க பலமாக படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோரின் பங்களிப்பு அமைந்துள்ளது. இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை நன்றாக அமைத்துக் கொடுத்துள்ளது.

மொத்தத்தில் டென் ஹவர்ஸ் -த்ரில்லிங் ஹவர்ஸ்.

Spread the love