Thursday, April 23

‘போர் தொழில்’-விமர்சனம்

சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் கதைக்களம் கொண்ட ‘போர் தொழில்’திரைப்படத்தில் திருச்சி பகுதியில் இளம் பெண்கள் பலர் கழுத்து நெரித்து கொலை செய்யப்படுகிறார்கள்.. தடயங்கள் ஏதுமின்றி இல்லாமல் ஒரே பாணியில் அடுத்தடுத்து பெண்கள் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன ,இந்த தொடர் கொலைகளின் வழக்கு உயர் கிரைம் பிரான்ஞ் அதிகாரி லோகநாதனிடம் (சரத்குமாரிடம்) விசாரணைக்காக ஒப்படைக்கப்படுகிறது. அவருடன் புதிதாக பொறுப்பேற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) இணைகிறார் சீரியல் கில்லர் ஒருவன்தான் இந்த கொலைகளை செய்கிறான் என எண்ணி விசாரணையில் ஈடுபடுகிறார்கள், தொடர் கொலைக்களுக்கான பின்னணி குறித்தும் ,உண்மைகொலையாளி யார்? என்ற விடை தெரியாத வினாக்களுக்கு தீர்வை தேடுகிறது சரத்குமார்- அசோக் செல்வனின் இணைகூட்டணி. ,தடயங்கள் இல்லாத நிலையில் அந்த கொலையாளியை அந்த கூட்டணி கண்டுபிடிக்கும்போது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுகிறது ,அந்த கொலைகள் நடப்பதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் மீதி கதை.

ஒரு சிறந்த படத்துக்கு நல்ல கதை எவ்ளவு அவசியமோ அதை போலவே அந்த கதையின் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்வது மிக அவசியமானது, அந்த வகையில் இந்த கதை களத்துக்கு சரத்குமார் – அசோக் செல்வன் கூட்டணியை அமைத்து கதையோடு கதாபாத்திரங்களை ஒன்றிப்போகவைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

பல படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நன்கு நடித்துஇருந்தாலும் இந்த படத்தில் கடைசி கிளைமாக்ஸ் வரை கம்பீரமாக நடித்து கதாப்பாத்திரமாகவே சரத்குமார் மாறிருக்கிறார் ,.இளம் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அசோக் செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக கம்பீரமான சரத்குமாருடன் பயணித்து தனது தனித்திறமையினை நிரூபித்துள்ளார்,அவருக்கு இணையாக நடித்துள்ள நிகிலா விமல், அவருடன் டூயட் பாடாமல் நாயகனுக்கு நம்பிக்கை தரும் கதாபாத்திரமாக நன்கு நடித்து அசோக்செல்வனின் மனதில் இடம் பெறுவதோடு படம் பார்க்கும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்கிறார், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள தயாரிப்பாளர் தேனப்பன் இந்த படத்தின் மூலமாக குணசித்ர நடிகராக மாறியுள்ளார் ,மற்றும் “நிழல்கள்” ரவி – O.A.K சுந்தர் ,சுனில் சுகடா என் பலரும் தங்களது கதாபாத்திரங்களின் தன்மைக்கு பொருத்தமான நடிப்பினை குறைவின்றி வழங்கியுள்ளார்கள்

பொதுவாக த்ரில்லர் பாணி கதைகளுக்கு ஒளியும் ஒலியும் (sound and light) இரண்டு கண்கள் போல மிக அவசியமானவை ,இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கலை செல்வன் சிவாஜியும், இசையினை ஜேக்ஸ் பிஜாயும் தந்து படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணமாக நன்கு பணியாற்றியுள்ளார்கள். ஶ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்ற வேகத்தை கொடுத்துள்ளது.

க்ரைம் திரில்லர் கதைகளுக்கென்று என்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக இருந்தாலும் அவர்களை திருப்தி படித்துவது எளிதான செயல் இல்லை ,கதையில் எதிர்மறையாளர்களால் போடப்படும் மர்ம முடிச்சுகள் அதை நாயகன் அவிழ்க்க எடுக்கும் முயற்சிகள் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிகள் நகர்ந்தால்தான் ரசிகர்களை அரங்கத்துள் இருக்கையின் நுனிமுனையில் அமரவைக்கமுடியும் அந்த வகையில் இந்த படத்தின் கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இயக்குநர் விக்னேஷ் ராஜா.சிறப்பாக வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

த்ரில்லர் கதை ஆர்வலர்களுக்கும் ,ஆக்ஷன் பட ரசிகர்களுக்கும் ‘போர் தொழில்’ படம் மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

Spread the love